என்னது.. வெறும் ரூ.11,999 தானா? மொபைல் மார்க்கெட்டில் சலசலப்பை கிளப்பும் புது 5G போன்! நம்பி வாங்கலாமா?

|

வெறும் ரூ.11,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் (5G Smartphone) ஆனது, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சலசலப்பை கிளப்பி உள்ளது என்றே கூறலாம்.

ஏனென்றால் - இது ஒரு ஆரம்பம் மட்டுமே ஆகும்; இனி வரும் மாதங்களில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எக்கச்சக்கமான பட்ஜெட் விலை 5ஜி போன்கள் அறிமுமாகும். அதற்கெல்லாம் ஒரு முன்னோடி தான் - இந்த ரூ.12கே ஸ்மார்ட்போன்!

அதென்ன ஸ்மார்ட்போன்?

அதென்ன ஸ்மார்ட்போன்?

நாம் இங்கே பேசுவது, இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி (Infinix Hot 20 5G) மாடலை பற்றித்தான். இதன் விலை ரூ.11,999 ஆகும்.

இது 5G-க்கான ஆதரவை மட்டுமின்றி வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா.. அல்லது அப்படியே ஓரங்கட்டி விடலாமா? இதோ எங்களுடை குவிக் ரிவ்யூ (Quick Review)!

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

டிசைன்: ஓகே.. ஓகே!

டிசைன்: ஓகே.. ஓகே!

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது யூனிபாடி பாலிகார்பனேட் பில்ட், டூ-டோன் ஃபினிஷ் மற்றும் டெக்ஸ்சர்டு பேக் பேனலை கொண்டுள்ளது. இது இன்பினிக்ஸ் நிறுவனத்தின் வழக்கமான வடிவமைப்பு தான்; அதே சமயம் கட்டமைப்பு ரீதியாக எப்போதும் நன்றாக இருக்கும் ஒரு வடிவமைப்பும் ஆகும்.

ஸ்மார்ட்போனின் கீழே யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் க்ரில் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. பின்பக்கத்தில் இரண்டு பெரிய கேமரா ரிங்ஸ் உள்ளது, அதன் பக்கவாட்டில் எல்இடி ஃபிளாஷ் மாட்யூல் ஒன்றும் உள்ளது!

டிஸ்பிளே: கொஞ்சம் ஓல்ட்-ஆ இருக்கு!

டிஸ்பிளே: கொஞ்சம் ஓல்ட்-ஆ இருக்கு!

இது 6.58-இன்ச் அளவிலான FHD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் பேக் செய்கிறது; இதுவரையிலாக எந்த குறையும் இல்லை. ஆனால் இது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிசைனை பெற்றுள்ளது. இது சற்றே பழைய டிஸ்பிளே டிசைன் ஆகும்!

சனி கிரகத்திற்கு அருகே ஜூம் செய்த போது.. விஞ்ஞானிகளுக்கு தெரிந்த வினோத தோற்றம்! அச்சு அசலா அப்படியே இருக்கு!சனி கிரகத்திற்கு அருகே ஜூம் செய்த போது.. விஞ்ஞானிகளுக்கு தெரிந்த வினோத தோற்றம்! அச்சு அசலா அப்படியே இருக்கு!

கேமராக்கள்: ஆச்சரியம் அளிக்கிறது!

கேமராக்கள்: ஆச்சரியம் அளிக்கிறது!

இந்த ஸ்மார்ட்போன் 50MP மெயின் கேமரா + அதிகமாக செயல்படாத ஒரு QVGA கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

ஆனாலும் பகல்நேர புகைப்படங்கள் ஆனது நல்ல விவரங்களையும், வண்ணங்களையும் வழங்குகின்றன; அதுவே இரவு நேரம் என்று வந்துவிட்டால் ஆச்சரியப்படும் படியான லோ-லைட் போட்டோக்களை பதிவு செய்கிறது.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா-வைட் அல்லது மேக்ரோ போட்டோக்களுக்கான திறன்கள் எதுவும் இல்லை. முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கீழ் பதிவாகும் புகைப்படங்கள் ஆனது நல்ல விவரங்களை வழங்குகிறது; ஆனால் பேக்கிரவுண்ட்டில் எக்ஸ்ப்போஷரை (Exposure) பராமரிக்க தவறுகிறது!

பெர்ஃபார்மென்ஸ்: கொடுக்குற காசுக்கு வொர்த்-ஆ இருக்கு!

பெர்ஃபார்மென்ஸ்: கொடுக்குற காசுக்கு வொர்த்-ஆ இருக்கு!

இதில் உள்ள டைமன்சிட்டி 810 SoC-க்கு ஒரு பெரிய நன்றி. இதை - விலைக்கு ஏற்ற செயல்திறனை வழங்கும் ஒரு சிப்செட் என்றால் அது மிகையாகாது.

போதாக்குறைக்கு, இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மேலும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோவேஜையும், அதை 512 ஜிபி வரை அதிகரிக்க உதவும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் வழங்குகிறது!

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

ஓஎஸ் - ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!

ஓஎஸ் - ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!

இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட Infinix நிறுவனத்தின் கஸ்டம் ஸ்கின் ஆன XOS V10 கொண்டு இயங்குகிறது. இந்த UI முழுவதும் ப்ளோட்வேர் (Bloatware) சிக்கல்கள் உள்ளன மற்றும் AI என்கிற வார்த்தையின் கீழ் தேவையற்ற பல ஆப்கள் உள்ளன!

பேட்டரி: டபுள் ஓகே!

பேட்டரி: டபுள் ஓகே!

பேட்டரியை பொறுத்தவரை டபுள் ஓகே என்றே கூறலாம். ஏனென்றால், இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் இது 18W சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. மெதுவாக சார்ஜ் ஆகினாலும் கூயோட, ஒரு நாள் முழுவதுமான பயன்பாட்டிற்கு இது போதுமானது தான்!

போனில் உள்ள ப்ளூடூத்தை அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ? அலெர்ட் ஆகிக்கோங்க!போனில் உள்ள ப்ளூடூத்தை அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ? அலெர்ட் ஆகிக்கோங்க!

வாங்கலாமா.. வேண்டாமா?

வாங்கலாமா.. வேண்டாமா?

"கண்ணியமான" செயல்திறன் மற்றும் 5ஜி-க்கான ஆதரவு மட்டுமே உங்களுடைய தேவை என்றால் நீங்கள் இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.

இது நல்ல பேட்டரி பேக்கப் மற்றும் உறுதியான பில்ட் குவாலிட்டியையும் கொண்டுள்ளது. ஆனால் கேமரா மற்றும் சாஃப்ட்வேர் என்று வந்துவிட்டால் - இது நிச்சயம் உங்களை ஈர்க்காது!

Best Mobiles in India

English summary
Who Can Choose This 12000 Rupees 5G Smartphone Check Out Our Infinix Hot 20 5G Quick Review

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X