Home
Mobile

Jio Phone 5G அறிமுகம் குறித்து முக்கியத் தகவல்.! அடேங்கப்பா இவ்வளவு சூப்பரான அம்சங்களா?

சமீபத்தில் அதிகம் எதிர்பார்க்;கப்பட்ட 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த 5ஜி சேவை நாட்டின் முன்னேற்றத்திற்கு
அருமையாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜியோ போன் 5ஜி குறித்தும் ஒரு முக்கியத் தகவல் வெளிவந்துள்ளது.

ஜியோ போன் 5ஜி

ஜியோ போன் 5ஜி

அதாவது கடந்த சில நாட்களாகவே,ஜியோ போன் 5ஜி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை வரும் தீபாவளிக்குள் அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக நாட்டில் 5ஜி சேவை முதலில்வழங்கத் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறது ஜியோ நிறுவனம்.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

அதேபோல ஜியோ நிறுவனத்தின் 5ஜி போன் ஆனது இப்போது தான் தயாரிக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. எனவே இந்த போன் அறிமுகமாக இன்னும் சில காலங்கள் ஆகும். குறிப்பாக ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தபிறகு தான் இந்த போன் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர்

மேலும் ஜியோ போன் 5ஜி மாடலின் அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். புதிய ஜியோ போன் 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ போன் ட்ரூ 5ஜி

ஜியோ போன் ட்ரூ 5ஜி

குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Jio Phone True 5G(ஜியோ போன் ட்ரூ 5ஜி) எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் தனித்துவமான வடிவமைப்பில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் 5ஜி போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். கண்டிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி மெயின் கேமரா

13எம்பி மெயின் கேமரா

ஜியோ போன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஜியோபோன் 5ஜி அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 4ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை 802.11, புளூடூத் 5.1, கூகுள் மொபைல் சேவைகள் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் எனப் பல சிறப்பான வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.8,000 அல்லது ரூ.10,000

ரூ.8,000 அல்லது ரூ.10,000

மேலும் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,000 அல்லது ரூ.10,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
When Jio Phone 5G Launch? Information leaked online: Specifications, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X