வாட்ஸ்அப் செயலியில் களமிறங்கும் 138 புதிய எமோஜிக்கள்.!

|

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு வசதிகள் சேர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன்

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக 138 எமோஜிக்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இமு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.20.196.6 பீட்டாவில் சோதனை செய்யப்படுகிறது.

அனிமேட்டெட் ஸ்டிக்கர்க

அன்மையில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. பின்பு அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் முந்தைய வழக்கமான ஸ்டிக்கர்களுடன் சேர்த்தே வழங்கப்படுகின்றன. இவை தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் சரியான போட்டி: அமேசான் குறித்த அதே தினத்தில் பிளிப்கார்ட் அதிரடி!

ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்கள் மிக முக்கிய

குறிப்பாக இதுபோன்ற ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்கள் மிக முக்கிய அம்சங்களாக விளங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தி பலர் தங்களது மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர். பின்பு இதை பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எமோஜிக்களை விட

முன்னதாக வழங்கப்பட்ட எமோஜிக்களை விட புதிய எமோஜிக்கள் வித்தியாசமானதாக இருக்கிறது. இதனை முதல் முறை பார்க்கும் போதே கண்டுபிடித்துவிட முடியும். இவற்றில் புதிய நிறங்கள், ஆடைகள், தலை முடி மற்றும் ஸ்கின் டோன் உள்ளிட்டவை புதுமையாக சேர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடதத்தக்கது.

சொந்தமான வாட்ஸ்

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்கள் இணைக்கப்படும். சமீபத்தில் QR கோடு மூலம் புதியவர்களை உள்ளே இணைக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. பின்பு அனைவரும் எதிர்பார்க்கப்படும் பணப்பறிமாற்றம் செய்யும் வசதியும் விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது

அல்லது முக்கியத்துவம்

இந்நிலையில் தேவையற்ற அல்லது முக்கியத்துவம் இல்லாத சாட்களை நிரந்தரமாக மியூட் செய்து வைக்கும் அம்சம் புதிதாக இணைக்கப்பட உள்ளது. இந்த வசதி மூலம் 8 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஓராண்டுக்கு ஒரு சாட்-ஐ மியூட் செய்து வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ந்த வசதியைக் கொ

குறிப்பாக இந்த வசதியைக் கொண்டு நீங்கள் மியூட் செய்வதால் அந்த சாட்டில் புதிய மெசேஜ் வரும் போது, கண்டிப்பாக நோடிபிகேஷன் காட்டாது. மேலும் சாட்டிங்கிற்கும் இந்த மியூட் வசதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஓராண்டு என்பதற்கு பதிலாக நிரந்தரமாக என்று புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது, இந்த அம்சம் தற்சமயம் பீட்டா வெர்சன் பீட்டா வெர்சன் பரிசோதனையில் உள்ளது. மேலும் இதற்கான அப்டேட், விரைவில் ஆண்ட்ராய்டு மறறும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp to Introduce 138 New Emojis Soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X