ஜியோவிற்கு போட்டியாக வாட்ஸ்ஆப் வசதியுடன் வரும் நோக்கியா ஃபீச்சர்போன்.!

இது ஒரு தெளிவான பிளாஸ்டிக் உடல் கொண்டு அதில் மைக்ரோயூஎஸ்பி, ஹெட்ஜாக், பவர் மற்றும் பொத்தான்களை கொண்டுள்ளது. விசைப்பலகையை பொறுத்தமட்டில் ஸ்லைடரின் கீழ் மறைந்துள்ளது.

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி பனானா போன் என்று அழைக்கப்படும் நோக்கியா
8110 4ஜி ஃபீச்சர்போனில் வாட்ஸ்ஆப் வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வாட்ஸ்ஆப் அறிவிப்பு ஜியோபோன் சாதனத்திற்கு நேரடி போட்டியாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவிற்கு போட்டியாக வாட்ஸ்ஆப் வசதியுடன் வரும் நோக்கியா ஃபீச்சர்போன்.!

நோக்கியா 8110 4ஜி ஃபீச்சர்போன் பொறுத்தவரை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் சர்ச் மற்றும கூகுள் மேப்ஸ் போன்றவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்தியாவில் 2.5 கோடி பேர் ஜியோபோன் பயன்படுத்தும் நிலையில், இந்த நோக்கியா 8110 மாடலில் வாட்ஸ்ஆப் வழங்கப்படும் பட்சத்தில் ஜியோபோனுக்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் வாட்ஸ்ஆப் வசதி வழங்கப்படும் என்று எச்எம்டி குளோபல் தலைமை அலுவலர் அறிவித்துள்ளார்.

நோக்கியா 8810 4ஜி வடிவமைப்பு

நோக்கியா 8810 4ஜி வடிவமைப்பு

நோக்கியா8110 4ஜி ஆனது அதன் அசல் கருவியின் தனித்துவமான வளைவு மற்றும் ஸ்லைடரை கொண்டுள்ளது. மற்றும் இன்னும் சிறிய வடிவமைப்பை பெற்று கைகளுக்குள் இன்னும் எளிமையாக பொருந்துகிறது.

 பொத்தான்

பொத்தான்

இது ஒரு தெளிவான பிளாஸ்டிக் உடல் கொண்டு அதில் மைக்ரோயூஎஸ்பி, ஹெட்ஜாக், பவர் மற்றும் பொத்தான்களை கொண்டுள்ளது. விசைப்பலகையை பொறுத்தமட்டில் ஸ்லைடரின் கீழ் மறைந்துள்ளது. அது வழக்கமான நேவிகேஷன் மற்றும் எண் விசைகளை கொண்டுள்ளது. இக்கருவி மொத்தம் இரண்டு நிறங்கள் - பாரம்பரிய கருப்பு மற்றும் வாழை மஞ்சள் - கிடைக்கிறது.

நோக்கியா 8110  4ஜி டிஸ்பிளே

நோக்கியா 8110 4ஜி டிஸ்பிளே

அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா 8110 4ஜி ஆனது ஒரு க்யூவிஜிஏ (QVGA) தீர்மானம் கொண்ட 2.45 அங்குல வளைந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு தொடுதிரை அல்ல, எனவே போனைப் பயன்படுத்துவதற்கு கீழே உள்ள நேவிகேஷன் பொத்தான்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் 240ஒ320 பிக்சல் பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஸ்னாப்டிராகன் 205:

ஸ்னாப்டிராகன் 205:

இந்த சாதனத்தில் 1.12ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட் வசதி மற்றும் 512எம்பி ரேம் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2எம்பிர பிரைமரி கேமரா மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 1500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
WhatsApp support coming soon for Nokia 8810 4G: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X