இப்போதைக்கு புதிய கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்த மாட்டோம்.! வாட்ஸ்அப் நிறுவனத்தின் நல்ல செய்தி.!

|

வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.

முன்பு தனியுரிமை கொள்கைகளை

அதாவது முன்பு தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியது. மேலும் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவோரின் தகவல்களை திரட்டி அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பதும் புதிய கொள்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.

 மட்டும் வாட்ஸ்அப் செயலியை பல

இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம்
கொண்டுவந்த தனியுரிமை கொள்கை மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை கொள்கை அறிவித்தவுடன் டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

PF பயனர்கள் இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.. தொடர்ந்து வைப்பு பணம் வைப்பதிலும் சிக்கல் ஏற்படும்..PF பயனர்கள் இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.. தொடர்ந்து வைப்பு பணம் வைப்பதிலும் சிக்கல் ஏற்படும்..

தனியுரிமை கொள்கைகளை

மேலும் இந்த புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. பின்பு வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

த வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம்

தற்போது இந்த வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வாட்ஸ்அப் தனது புதிய கொள்கைகளை இப்போது அமல்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். பின்பு இந்த புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காத பயனர்களின் வாட்ஸ்அப் செயலியில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..

ந்தியாவில் தனிநபர் தகவல்

அதேபோல் இந்தியாவில் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்கும்படி பயனாளர்களை வற்புறுத்த மாட்டோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.90,000 விலை ஏசியை வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை: அமேசானின் தரமான காரியம்: கழுவி ஊற்றும் மக்கள்.! ஏன்?ரூ.90,000 விலை ஏசியை வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை: அமேசானின் தரமான காரியம்: கழுவி ஊற்றும் மக்கள்.! ஏன்?

 புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காதவர்கள்

குறிப்பாக புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காதவர்கள் செயலியின் அனைத்து அம்சங்களையும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp has announced that it will not force users to accept the new policy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X