Home
Mobile

மொபைல் போட்டோகிராபி பிரியர்களை ஏன் கேலக்ஸி எஸ்9| எஸ்9+ ஈர்க்கிறது.?

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் ஒவ்வொரு புதிய தலைமை ஸ்மார்ட்போனுமே ஒரு புதுமை மிக்க கண்டுபிடிப்பு ஆகும்.

By Muthuraj

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் ஒவ்வொரு புதிய தலைமை ஸ்மார்ட்போனுமே ஒரு புதுமை மிக்க கண்டுபிடிப்பு ஆகும். அதற்கு சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் புரட்சிமிக்க மேம்பாடுகள் என்ன என்று கேட்டால்.? துளி கூட யோசிக்காமல் அதன் கேமராக்கள் என்று கூறலாம்.

மொபைல் போட்டோகிராபி பிரியர்களை ஏன் கேலக்ஸி எஸ்9| எஸ்9+ ஈர்க்கிறது.?

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமரா பற்றி அதிகம் பேசப்பட்டது. வெளியான பின்னர், ஏன் அவைகள் அதிகம் பேசப்பட்டது என்கிற காரணங்கள் புரிய வந்தது. ஒரு காரணம் இல்லை. எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமராக்களின், லோ லைட் ஷார்ட்ஸ், சூப்பர் ஸ்லோ- மோ வீடியோக்கள், ஏஆர் எமோஜிஸ் என பல காரங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

மொபைல் போட்டோகிராபி பிரியர்களை ஏன் கேலக்ஸி எஸ்9| எஸ்9+ ஈர்க்கிறது.?

அவைகளை பற்றி பேசுவதை விட பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கும்மென்று நம்புகிறோம்.

டூயல் அப்பெர்ஷர்.!

டூயல் அப்பெர்ஷர்.!

ஒரு முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படமானது சிறந்த முறையிலான ஒளியை பெற்றுள்ளது என்பதை எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் டூயல் அப்பெர்ஷர் உறுதி செய்கிறது. இதன் இரண்டு எப் ஸ்டாப் முறைகள் ஆனது மனித கண்களை போன்றே, தானாகவே வெவ்வேறு ஒளி நிலைமைகளை ஏற்றுக்கொள்ளும். இதன் பின்புற எப்1.5 துளை ஆனது குறைந்த வெளிச்சத்திலும் கூட, பிரகாசமான மற்றும் தெளிவான புகைப்பட பதிவை உறுதிப்படுத்துகிறது. மறுபுறம், அதாவது பகல் நேரத்தில் புகைப்படங்கள் மிக கூர்மையாக வெளியே வர உதவுவதற்கு இதன் எப்2.4 துளை உதவும். ஆக மொத்தம் குறைந்த ஒளியோ, இருளான நேரமோ, சாம்சங் கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் எதற்கும் தயார்.!

சூப்பர் ஸ்லோ- மோ.!

சூப்பர் ஸ்லோ- மோ.!

கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராக்கள், சூப்பர் ஸ்லோ-மோ அம்சத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. விநாடிக்கு 960 பிரேம்கள் என்கிற விகிதமானது, கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன் கேமராவின் சூப்பர் ஸ்லோ-மோ அம்சத்தினை உண்மையிலேயே ஒவ்வொரு கணமும் கட்சிதமாக பதிவாக்குகிறது. பதிவாகும் வீடியோக்களுடன் இசையை சேர்ப்பதன் மூலம் உங்கள் கலைப்படைப்பை நீங்கள் வெளிப்படுத்தலாம். உடன் மூன்று லூப்பிங் ஸ்டைல்களின் - தலைகீழ்ரிவர்ஸ், பார்வேட், ஸ்விங் - ஆதரவும் உண்டு.

லாக் ஸ்க்ரீனாக கூட செட் செய்யலாம்.!

லாக் ஸ்க்ரீனாக கூட செட் செய்யலாம்.!

மேலும் ஒரு நேர்த்தியான ஸ்லோ-மோ வீடியோவை உருவாக்க எஸ்9 தொடர் ஸ்மார்ட்போனின் மோஷன் டிடெக்ஷன் திறனும் கைகொடுக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக, உங்களுக்கு பிடித்த சோ-மோ வீடியோவை மீண்டும் மீண்டும் காணும் வண்ணம், அதை உங்களின் லாக் ஸ்க்ரீனாக கூட செட் செய்யும் திறனை எஸ்9 தொடர் வழங்குகிறது.

ஆப்டிக்கல் இமெஜ் ஸ்டெபிலைசேஷன்.!

ஆப்டிக்கல் இமெஜ் ஸ்டெபிலைசேஷன்.!

கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராவின் கவனிக்கத்தக்க அம்சங்களில், ஆப்டிக்கல் இமெஜ் ஸ்டெபிலைசேஷனும் ஒன்றாகும். இந்த அம்சமானது, நகரும் சமயத்தில் பதிவாக்கப்பட்ட புகைப்படங்களானது சரியான முறையில் மற்றும் பிரகாசமான ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

லைவ் போகஸ்.!

லைவ் போகஸ்.!

லைவ் போகஸ் என்பது கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராவின் விளையாட்டையே மாற்றி அமைகிறது. இந்த அம்சம், ஒரு சரியான போர்ட்ரெயிட் படத்தை கைப்பற்ற அனுமதிக்கிறது மற்றும் அது மிக ஆழமான தகவல்களை கொண்டுள்ளதையும் உறுதி செய்கிறது. கூடுதல் சுவாரசியம் என்னவெனில், ஒரு படத்தை எடுக்கும் முன்னர் மட்டுமின்றி, பின்னரும் கூட உங்களின் விருப்பப்படி டெப்த் ஆப் பீல்டை மாற்றலாம் இத்தகைய அற்புதமான அம்சங்களை, கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராவில் மட்டுமே அணுக கிடைக்கிறது. ஒருவேளை ன் நீங்களொரு ஸ்மார்ட்போன் போட்டோகிராபி பிரியர் என்றால் எஸ்9 தொடர் ஆனது, உங்களுக்கான ஒரு முழுமையான மகிழ்ச்சி ஆகும்.

Best Mobiles in India

English summary
What makes the Galaxy S9|S9+ camera a photography enthusiast’s delight. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X