மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மாரட்போன்களை அறிமுகம் செய்கிறது. அதன்படி அண்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 9 சீரிஸ் ரக ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமராக்கள் வசதியுடன் வெளிவந்துள்ளன. அதிலும் தரமான புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபி அனுபவத்துடன் நம்மை பிரமிக்க வைக்கின்றன என்று தான் கூறவேண்டும்.

மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

மேலும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை சோதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதாவது தனித்துவமான குவாட்-லென்ஸ் கேமரா அமைப்பு உடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க அருமையாக உதவுகிறது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். இயற்கையான காட்சிகளை அதே வண்ணத்தில் படம் பிடிக்க உதவுகிறது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

ஒப்பிடமுடியாத மொபைல் புகைப்படங்களை வழங்குகிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமராக்கள். குறிப்பாக மேம்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புகளை பற்றி சற்று முழுமையாக பார்ப்போம்.

மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

தனித்துவமான கேமரா வசதி
இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்கள் சிறந்த வன்பொருள் மற்றும் மேம்பட்ட வன்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது ஒன்பிளஸின் பிரீமியம் ஹார்ட்வேர் மற்றும் மென்மையான மென்பொருள் என இரண்டு அம்சங்களும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக்களில் இருப்பதால் தரமான கேமரா அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். குறிப்பாக ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனம் அதன் ஹாசல்பாட் கேமராக்களுடன் (Hasselblad Cameras) ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபி புதிய தனித்துவமான தொழில்நுட்ப சிறப்பை அடைந்துள்ளது.

இந்த சாதனத்தில் 48 எம்.பி முதன்மை லென்ஸ், 50 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 8 எம்.பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 2 எம்.பி மோனோக்ரோம் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் சோனி ஐஎம்எக்ஸ் 789 சென்சாரைப் பயன்படுத்துகிறது. இது ஒன்பிளஸ் சாதனத்தில் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட முதன்மை கேமரா சென்சார் ஆகும். மேலும் இந்த சாதனத்தில் 50எம்பி OIS- இயக்கப்பட்ட சோனி IMX766 வைடு ஆங்கிள் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 50எம்பி சென்சார் ஆனது தரமான புகைப்படங்களை எடுக்க பெரிதும் உதுவும் என்றே கூறலாம்.

முதன்மை லென்ஸ் மற்றும் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என இந்த இரண்டு கேமராக்களும் அனைத்து இடங்களிலும் அதிகமாக உதவும். இதுதவிர கூர்மையான விவரங்களை பதிவு செய்ய, அதாவது சிறிய பொருட்களை துல்லியமாக எடுக்க இந்த சாதனத்தின் 2 எம்.பி மோனோக்ரோம் சென்சார் அதிகம் பயன்படுகிறது.

அதேபோல் இந்த சாதனத்தில் உள்ள 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் ஆனது மிருதுவான ஜூம் ஷாட்களுக்கு அருமையாக உதவும். குறிப்பாக 3.3x வரை ஜூம் ஷாட்டுகளை எடுக்க அனுமதிக்கிறது இந்த அசத்தலான லென்ஸ். மேலும் செல்பிகளுக்காக ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 16எம்பி EIS- இயக்கப்பட்ட சோனி IMX471 சென்சாரை பயன்படுத்துகிறது. அதேசமயம் இது வீடியோ கால் அழைப்புகள் என பல்வேறு வசதிகளுக்கும் பயன்படும்.

மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

ஹாசல்பாட் கேமரா பயன்பாடு மற்றும் அம்சங்கள்

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் தனித்துவமான கேமரா அமைப்புகளுடன் வெளிவந்துள்ளன. அதிலும் இந்த இந்த சாதனங்கள் முதன்மை கேமரா வன்பொருளைப் பயன்படுத்த அதிகமாக உதவுகிறது. மேலும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஹாசல்பாட் புரோ மோடு ஒரு புதிய UI ஐ கொண்டு இயங்குகிறது. தனித்துவமான வண்ணங்களை பதிவு செய்த இந்த ஹேசல்பாட் ஷட்டர் பயன்படுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு படத்தைக் கிளிக் செய்யும் போது திருப்திகரமான ஹாசல்பாட் கேமரா ஒலியைக் கேட்கலாம். தெரியாதவர்களுக்கு, ஹாசல்பாட் என்பது 80 ஆண்டுக்கால வரலாறு மற்றும் சிறப்பைக் கொண்ட ஒரு மிகப்பெரிய கேமரா நிறுவனமாகும். இந்நிறுவனம் பொதுவாக நடுத்தர வடிவ கேமராக்கள் மற்றும் லென்ஸில் உலகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'மனிதக்குலத்தின் சந்திரனின் முதல் கால் அடி' போன்ற நிகழ்வுகளை ஹாசல்பாட் கேமராக்கள் கைப்பற்றியுள்ளது. ஹாசல்பாட் புரோ மோடு ஒரு புதிய UI ஐ கொண்டு இயங்குகிறது. இது எளிதான செயலாக்க மென்பொருளை வழங்குகிறது. நீங்கள் ஒரு ஷட்டர் டேக் பிரியர் என்றால், உங்கள் புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல கட்டுப்படுத்தவும், நன்றாக மாற்றவும், ஐஎஸ்ஓ, ஃபோக்கஸ், எக்ஸ்போஷர் டைம், வைட் பேலன்ஸ் மற்றும் பலவற்றை பலவற்றை சரிசெய்யவும் உங்களுக்கு ஒன்பிளஸ் அனுமதி வழங்குகிறது. மேலும் இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் அனிமேஷன்கள், கேமரா ஆப் வசதிகள், பில்டர்கள் போன்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும். அதாவது நீங்கள் விரும்பிய காட்சிகளை அப்படியே பதிவு செய்ய உதவுகிறது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

யதார்த்தமான படங்களை எடுக்க உதவும் அருமையான கேமராக்கள்
ஒன்பிளஸ் 9 ப்ரோ மிகவும் யதார்த்தமான தோற்றமுடைய படங்களை எடுக்க உதவுகிறது என்று தான் கூறவேண்டும். அதாவது ஒன்பிளஸின் தொழில்நுட்ப சிறப்பையும், ஹாசல்பாட்டின் ஆழ்ந்த புகைப்பட நிபுணத்துவத்தையும் இணைத்து மொபைல் போட்டோகிராஃபி தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை நிறுவனம் இப்போது வழங்குகிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் பகல் படங்கள் மற்றும் வீடியோக்கள் துல்லியமான வண்ணங்களையும் சிறந்த விவரங்களையும் காட்டுகின்றன. புகைப்பட கலைஞர்களுக்கு இந்த சாதனம் பெரிதும் உதவும் என்றே கூறலாம்.

இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் 48எம்பி f / 1.8 சோனி IMX789 சென்சார் ஆனது டூயல் நேட்டிவ் ஐஎஸ்ஒ மற்றும் 12-பிட் அவுட்புட்-ஐ வழங்குகிறது. பாரம்பரியமாக, ஸ்மார்ட்போன்கள் 10-bit RAW வடிவமைப்பைக் கொண்டுள்ளன, ஆனால் ஒன்பிளஸ் 9 ப்ரோ 12-bit RAW வடிவமைப்பை வழங்குகிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ கேமரா ஆனது 64 மடங்கு சிறந்த வண்ணங்கள் மற்றும் அதிக டைனமிக் வரம்பைக் கொண்ட படங்களை வழங்க அனுமதிக்கிறது. எளிமையாகச் சொன்னால், ஒவ்வொரு படங்களையும் ஒன்பிளஸ் 9 ப்ரோ உயிர்ப்பிக்கிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ கேமரா ஆனது சுற்றுச்சூழல் அமைப்புக்கு தகுந்தபடி சுவாரஸ்யமான புதிய 'டில்ட் ஷிப்ட்' மோட் வசதியை கொடுக்கிறது. இந்த வசதி பயனர்களுக்கு தனி அனுபவத்தை கொடுக்கும். அதேசமயம் சுவாரஸ்யமான படங்களை எடுக்க அனுமதிக்கும்.

இயற்கை மற்றும் லேண்ட்ஸ்கேப் புகைப்படங்கள் பிடிக்க தரமான கேமரா
பிரத்யேக அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் சிறந்த இயற்கை மற்றும் லேண்ட்ஸ்கேப் படங்களை அருமையாக பிடிக்க முடியும். 14 மிமீ சமமான லென்ஸின் 50MP சோனி ஐஎம்எக்ஸ் 766 சென்சார் (1 / 1.56 ") தெளிவு, விவரம், டைனமிக் ஆகிய அனைத்து நன்மைகளையும் வழங்கும். அதாவது விலைக்கு தகுந்த கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒன்பிளஸ் ஒரு ஃப்ரீஃபார்ம் லென்ஸைப் பயன்படுத்துவதால், நீங்கள் கைப்பற்றும் படங்கள் மற்றும் வீடியோக்கள் விளிம்புகளைச் சுற்றி விலகல் இல்லாமல் இருக்கும். மேலும் ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற கேமராக்கள் இருப்பதால் டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களுக்கு இனி அவசியமில்லை என்றே கூறலாம். அதாவது ஃப்ரீஃபார்ம் லென்ஸ் வன்பொருள் மட்டத்தில் விலகலை சரிசெய்கிறது, சரியான நிலையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது.

மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

மிகவும் தெளிவான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது
இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தில் உள்ள 50எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் ஆனது லேண்ட்ஸ்கேப் படங்களை எடுக்க உதவும், அதேசமயம் உயர்தர மேக்ரோக்களையும் படம் பிடிக்கிறது. இந்த மிகப் பெரிய 50எம்பி சென்சார் ஆனது சிறிய உயிரனங்கள் மற்றும் பொருட்களை மிகவும் தெளிவாக எடுகிறது. மேலும் சிறிய பொருட்களின் மிகவும் துல்லியமான விவரங்களை கூட அருமையாக பதிவு செய்கிறது இதன் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ். அதேபோல் இந்த சாதனத்தில் உள்ள 48எம்பி முதன்மை கேமரா உதவியின் வேகமாக புகைப்படங்களை எடுக்க முடியும். நீங்கள் பேருந்து,கார் போன்ற வாகனங்களில் செல்லும்போது கூட தரமான புகைப்படங்களை எடுக்க உதவி செய்யும். குறிப்பாக இது உங்களுக்கு இயற்கையான வண்ணங்களுடன் கூடிய நம்பமுடியாத அளவிற்குத் துல்லியமான புகைப்படங்களை வழங்குகிறது.

மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

நைட் ஃபோட்டோகிராஃபி
ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள 48எம்பி முதன்மை சென்சார் மற்றும் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் ஆதரவுடன் இரவு நேரங்களில் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதாவது குறைந்த வெளிச்சத்திலும் மிகவும் துல்லியமான புகைப்படங்களை எடுக்க தனி மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த இரண்டு சென்சார்களும் அதிக அளவிலான ஒளியைக் கைப்பற்றுகின்றன. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஹாசல்பாட்டின் வண்ணச் சரிபார்ப்பை நிறைவு செய்கிறது. இதன் விளைவாக சிறந்த டைனமிக் வரம்பு மற்றும் அதிக ஐஎஸ்ஓ மதிப்புகளில் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது.

மேலும் நைட்ஸ்கேப் மோட், முதன்மை மற்றும் அல்ட்ரா வைடு சென்சார் ஆதரவுடன் இரவு நேரங்களில் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு இரவு நேர நிகழ்சிகளில் இடம்பெற்றுள்ள பலவகையான லைட்டிங் அமைப்பிற்கு தகுந்தபடி புகைப்படங்களை எடுக்க
அனுமதிக் கொடுக்கிறது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.

சிறந்த வீடியோகிராபி ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் நீங்கள் முதல் முறையாக 4K வீடியோவை 120fps இல் ஷூட் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. அதேபோல், பின் சூழலில் எப்போதும் தெளிவான காட்சிகளைப் பெறுவதை உறுதி செய்ய DOL-HDR செயல்படுகிறது. ஒன்ப்ளஸ் 9 ப்ரோ நைட்ஸ்கேப் வீடியோ 2.0 ஐ பேக் செய்கிறது. இது குறைந்த ஒளி சூழலில் கூட பிரகாசமான மற்றும் தெளிவான வீடியோக்களைப் படம் பிடிக்க அனுமதிக்கிறது. டைம் லாப்ஸ், போட்ரைட் வீடியோ, நிலையான காட்சிகளுக்காக சூப்பர் ஸ்டெபிலைசேஷன், ஃபோகஸ் டிராக்கிங் மற்றும் பல அம்சங்கள் ஒன்பிளஸ் 9 ப்ரோவுடன் வருகிறது. மேலும் இதில் உள்ள நைட்ஸ்கேப் வீடியோ, போர்ட்ரெய்ட் வீடியோ, அல்ட்ரா-வைட் ஆங்கிள் டைம்-லேப்ஸ் வீடியோக்கள், ஃபோகஸ் டிராக்கிங் போன்ற அதிநவீன முறைகள் மூலம் புதிய வீடியோ பதிவு அனுபவம் கிடைக்கும்.

மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

முழுமையான கேமரா ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் 9 ப்ரோ உண்மையில் புகைப்படம் எடுப்பதில் தனி அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். நீங்கள் நினைக்கும் வண்ணங்களை அப்படியே
பதிவு செய்ய உதவுகிறது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஹாசல்பாட்டின் கேமரா நிபுணத்துவம் பலவிதமான கேமரா திறன்களை உள்ளடக்கியது, எனவே ஹாசல்பாட் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் ஒரு தீவிர புகைப்படக்காரராக இருந்தால், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒன்பிளஸ் 9 ப்ரோ சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும்.
Most Read Articles
Best Mobiles in India

English summary
What Makes OnePlus 9 Pro The Most Advanced Camera Smartphone.: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X