நிலையற்ற ஸ்மார்ட்போன் குருட்டுத்தன்மை என்றால் என்ன.? தப்பிப்பது எப்படி.?

|

24 மணி நேரமும் ஸ்மார்போனும் கையுமாம் சுற்றுபவர்களை பார்க்கும் போது, எது அடிமை..? எது ஆளுமை..? என்பதே விளங்காது. பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் தான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல் தோன்றுகிறது.

அவசியம் மீறி அத்தியாவசியம் என்ற ஒரு நிலையை அடைந்துவிட்ட ஸ்மார்ட்போன்கள் நம்மை ஆள்வதும், அடிமைபடுத்துவதும் ஒருபக்கம் இருக்க நம்மை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்கிறது என்பதும் நிதர்சனம் தான். அப்படியாக, ஸ்மார்ட்போன் மூலம் நமக்கெல்லாம் ஏற்படலாம் என்று கருதப்படும் 'ஒரு பாதிப்பை' பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை ஒதுக்கித்தள்ள ஆரம்பித்து விடுவீர்கள் என்றே கூறலாம், அதென்ன பாதிப்பு.?

பார்வையிழப்பு

பார்வையிழப்பு

உறங்கும்போது ஸ்மார்ட்போனை உடன் வைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்ட இரண்டு பெண்களுக்கு நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு" பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு கண்ணில் மட்டும்

ஒரு கண்ணில் மட்டும்

நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு (transient smartphone blindness) என்றால் இருட்டில் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் பார்வை இழப்பு ஆகும்.

பல நிமிடங்கள்

பல நிமிடங்கள்

அதாவது நீண்ட நேர பயன்பாட்டிற்கு பின்னர் தொலைபேசியை கீழே வைக்கும்போது, அவர்கள் தொலைபேசியை பார்க்க முடியாது. ஏனென்றால் "இருண்ட சூழ்நிலையில் இருந்த மற்றொரு கண்ணனுக்கு ஏற்ற பொதுவான பார்வையை ஏற்க வெளிச்சத்தில் இருந்த கண் பல நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது என்பதால் தான்.

ஒளிமிகும் நிலை

ஒளிமிகும் நிலை

வலது புறமாக படுத்தால் இடது கண்ணால் தான் ஸ்மார்ட்போனை அதிகம் பார்க்க நேரிடும் அப்படியான ஒரு நிலையில் ஒரு கண்ணில் ஒளிமிகும் நிலையும் மறு கண் இருளான நிலையையும் சந்திக்கும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

மிக அரிதாக

மிக அரிதாக

நமது விழித்திரைகள் எந்தவொரு கேமிராவை விடவும் வெவ்வேறு ஒளி நிலைகளை அற்புதமாக கையாளக்கூடியதாக இருப்பினும் மிக அரிதாக நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு" ஏற்படுகிறது.

ப்ரீ-அட்வைஸ் :

ப்ரீ-அட்வைஸ் :

ஒன்று முடிந்த அளவு இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தவிர்க்கவும். அல்லது லைட் ஆப் செய்யாமல் மொபைல் பயன்படுத்தவும் அல்லது கண்களுக்கு மிகவும் நெருக்கமாக மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
What is transient smartphone blindness and how to prevent. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X