ஸ்மார்ட்போன் தெரியும், சாஃப்ட்போன் தெரியுமா?

|

சாஃப்ட்போன் என்பது சாஃப்ட்வேர் டெலிபோன் ஆகும். இந்த போன் கொண்டு மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பம் கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களில் வாய்ஸ் ஓவர் ஐ.பி (voice over IP) முறையில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போன் தெரியும், சாஃப்ட்போன் தெரியுமா?

சாஃப்ட்போனின் முக்கிய அம்சமே இதை பயன்படுத்த டெலிபோன் தேவையில்லை என்பது தான். உங்களது கம்ப்யூட்டர் இன்டகிரேட் செய்யப்பட்ட வொர்க்பிளேஸ் ஆக மாறி தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வழி செய்யும்.

சாஃப்ட்போன் பயன்படுத்த உங்களிடம் இருக்க வேண்டியவை

சஃப்ட்போன் சீராக வேலை செய்ய உங்களிடம் அழைப்புகளை மேற்கொள்ளும் இன்டர்ஃபேஸ், இதனை இயக்கும் சிஸ்டம், சில கோடெக் மற்றும் காண்டாக்ட்கள் அவசியமாகும். முதற்கட்டமாக இதன் இன்டர்ஃபேஸ் வாடிக்கையாளர் மற்றும் கம்ப்யூட்டர் சாதனத்திடையே தகவல் பரிமாற்றம் செய்ய அடித்தளமாக இருக்கிறது.

கூகுள் தேடல் பயன்பாட்டில் புதிய ஷார்ட்கட்ஸ்: பயன்படுத்துவது எப்படி.?கூகுள் தேடல் பயன்பாட்டில் புதிய ஷார்ட்கட்ஸ்: பயன்படுத்துவது எப்படி.?

இந்த இன்டர்ஃபேஸ்-இல் டையல் பேட், கண்ட்ரோல் பட்டன், ஆடியோ அவுட்புட் மற்றும் வீடியோ அவுட்புட் உள்ளிட்டவை அவசியம் இருக்க வேண்டும். அடுத்து அழைப்புகளை ப்ரோடோகால் மூலம் பெற உதவும் மாட்யூல் சிஸ்டம் அவசியமானதாகும். இத்துடன் அனலாக் முறையில் இருந்து டிஜிட்டல் ஃபார்மேட்களுக்கு தகவல்களை மாற்ற உதவும் கோடெக்கள் அவசியமாகும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

வாய்ஸ் ஓவர் ஐ.பி. மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, மென்பொருள் வாய்ஸ் தகவல்களை VoIP புரோவைடருக்கு அனுப்பி, அங்கு வாய்ஸ் தகவல்கள் டெலிபோன் எக்சேஞ்சிடம் அனுப்பப்படுகிறது. மறுபுறம் இருந்து வரும் வாய்ஸ் சிக்னல்கள் இதேபோன்று தலைகீழாக பரிமாற்றம் செய்யப்பட்டு வாய்ஸ் கால் நிறைவுகிறது.

சாஃப்ட்போன் நன்மைகள்:

விலை குறைவு:

சாஃப்ட்போன்களின் மிகமுக்கிய அம்சமாக இதன் விலையை கூறலாம். சாஃப்ட்போன் பயன்படுத்த லேண்ட்லைன் அல்லது மற்ற உபகரணங்கள் தேவையில்லை என்பதால் அதிகப்படியான பணத்தை மிச்சம் செய்யலாம்.

அதிக மெமரி:

கம்ப்யூட்டரே தகவல் பரிமாற்றத்திற்கு அடித்தளமாக மாறிவிடுகிறது என்பதால் அனைவருக்கும் நேரடியாக மின்னணு அட்ரெஸ் புக் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
A Softphone is a name given to "Software Telephone", that allows users to make telephone calls through software from a computer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X