அட இது நல்லா இருக்கே.. NOKIA போன்களின் மீது Easy Pay திட்டத்தை அறிவித்த HMD.. கஸ்டமர்கள் குஷி!
நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம், எச்எம்டி ஈஸி பே (HMD Easy Pay) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. எச்எம்டி ஈஸி பே என்றால் என்ன? இதை பயன்படுத்தி என்னென்ன நோக்கியா போன்களை வாங்க முடியும்?
எச்எம்டி ஈஸி பே என்றால் என்ன? டிஎம்ஐ ஃபைனான்ஸ் (DMI Finance) உடன் இணைந்து எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்துள்ள ஈஸி பே சேவையானது, நோக்கியா ஸ்மார்ட்போன்களை எளிமையாக வாங்க வழிவகுக்கும் ஒரு நிதி சேவையாகும். நிதி உதவி மட்டுமின்றி, இந்த சேவையின்கீழ் பல கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.

எச்எம்டி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஈஸி பே என்பது இன்ஸ்டன்ட் & பேப்பர்லெஸ் (Instant and Paperless) சேவையாகும். அதாவது இது முழுக்க-முழுக்க டிஜிட்டல் செயல்முறையாக (Digital Process) இருக்கும் மற்றும் உடனடி ஒப்புதலை பெறும். ஒட்டுமொத்தமாக இது சில நிமிடங்களில் முடிந்து விடும்.
செயல்முறை முடிந்த வேகத்தில் விநியோகமும் மிகவும் நடக்கும். எச்எம்டி நிறுவனத்தின் கூற்றுப்படி, டிஜிட்டல் ப்ராசஸ் முடிந்ததும் 2 மணி நேரத்திற்குள் சேனல் பார்ட்னர்களுக்கு கடன் தொகைகள் வழங்கப்பட்டுவிடும். முன்னரே குறிப்பிட்டபடி, எச்எம்டி ஈஸி பே சேவையின்கீழ் பல கூடுதல் நன்மைகளும் உண்டு.

அவைகளில் ஈஸி பே சேவையில் எந்தவிதமான மறைமுக கட்டணங்களும் கிடைக்காது. இதன் கீழ் வெவ்வேறு தவணைக்காலம் மற்றும் முன்பணம் செலுத்தும் விருப்பங்களின் (Tenure and down payment options) கீழ் நோ-காஸ்ட் இஎம்ஐ (No-cost EMI) கிடைக்கும். இதன்மூலம் கஸ்டமர்களால் வெளிப்படையான விலைகளை அறிந்துகொள்ள முடியும்.
எச்எம்டி ஈஸி பே சேவையின் கீழ் என்னென்ன நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கும்? இந்த சேவையின்கீழ் நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ், நோக்கியா சி32 (Nokia C32), நோக்கியா சி22 (Nokia C22) மற்றும் நோக்கியா சி12 ப்ரோ (Nokia C12 Pro) உள்ளிட்ட பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கும்.
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.56-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ், 8எம்பி செல்பீ கேமரா, 50எம்பி + 2எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது. இது தற்போது ரூ.12,299 க்கு வாங்க கிடைக்கிறது.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.50-இன்ச் டிஸ்பிளே, 8எம்பி செல்பீ கேமரா, 50எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது. இது தற்போது ரூ.12,299 க்கு வாங்க கிடைக்கிறது. இது தற்போது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நோக்கியா சி22 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.50-இன்ச் டிஸ்பிளே, 8எம்பி செல்பீ கேமரா, 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கோ எடிஷன் போன்றவைகளை கொண்டுள்ளது. இது தற்போது ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.30-இன்ச் டிஸ்பிளே, யுனிசாக் எஸ்சி9863ஏ ப்ராசஸர், 5எம்பி செல்பீ கேமரா, 8எம்பி ரியர் கேமரா, 2ஜிபி ரேம் / 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் போன்றவைகளை கொண்டுள்ளது. இது தற்போது ரூ.7,099 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








