iPhone 14 VS iPhone 15.. அடேங்கப்பா.. அதே விலை.. ஆனால் இவ்ளோ வித்தியாசங்களா.. செப்.15ல் ஆர்டர் அள்ள போகுது!
2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் நேற்றிரவு நடந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. எதிர்பார்த்தபடியே இந்த சீரிஸின் கீழ் 4 மாடல்கள் அறிமுகமாகின: ஐபோன் 15, 15 பிளஸ், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ பிளஸ்!
இந்த 4 புதிய ஐபோன் மாடல்களில் பெரும்பாலானவர்களின் கவனம் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ஐபோன் 15 மீது தான் உள்ளது. ஏனென்றால் இதுதான் இருப்பதிலேயே மிகவும் மலிவான மாடலாகும். ஒருவேளை நீங்களும் ஐபோன் 15-ஐ வாங்க திட்டமிட்டால், அதன் விலை என்ன? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? ஐபோன் 14-க்கும் இதற்குமிடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

ஐபோன் 15 விலை: இந்தியாவில் இது ரூ.79,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அறிமுகமாகும் போது ஐபோன் 14-ன் ஆரம்ப விலை என்னவாக இருந்ததோ, அதே விலையில் புதிய ஐபோன் 15 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.69,990 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 15 ப்ரீ-ஆர்டர் மற்றும் விற்பனை: ஆப்பிள் ஐபோன் 15 மாடல் மட்டுமின்று, ஐபோன் 15 சீரீசின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து 4 மாடல்களுமே வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் முன்பதிவு (ப்ரீ-ஆர்டர்) செய்ய கிடைக்கும். அதை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஐபோன் 15 சீரிஸின் 'ஷிப்பிங்' தொடங்கும்.
iPhone 14 VS iPhone 15: யார் சொன்னாலும் நம்பாதீர்கள்! பழைய ஐபோன் 14க்கும் புதிய ஐபோன் 15க்கும் இடையே பெரிய அளவிலான வேறுபாடுகள் இல்லையென்று யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். ஏனென்றால் இவ்விரு மாடல்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள், வித்தியாசங்கள் மற்றும் மேம்பாடுகள் உள்ளன.
ஐபோன் 15 புதிய கலர் ஆப்ஷன்களை பெற்றுள்ளது: புதிய ஐபோன் 15 சீரிஸ் ஆனது பிங்க் மற்றும் க்ரீன் என்கிற 2 புதிய வண்ணங்களில் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 டைனமிக் ஐலேண்ட் உடன் வருகிறது: ஐபோன் 14 சீரிஸில் உள்ள ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த டிஸ்பிளே அம்சம், தற்போது ஐபோன் 15 மாடலிலும் கிடைக்கிறது.
இரு மடங்கு பிரகாசமான டிஸ்பிளே: ஐபோன் 15 மாடலானது அதே 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவுடன் வருகிறது. இருப்பினும் அது 2000 நிட்ஸ் என்கிற அளவிலான பீக் ப்ரைட்னஸ்ஸை ஆதரிக்கின்றது, அதாவது இது பழைய ஐபோன் 14 மாடலில் உள்ளதை விட இரு மடங்கு பிரகாசமான டிஸ்பிளேவாக இருக்கும்.
சக்திவாய்ந்த சிப்செட்: ஆப்பிள் ஐபோன் 15 மிகவும் சக்திவாய்ந்த ஏ16 பயோனிக் உடன் வருகிறது. இது 4என்எம் அடிப்படையிலான ப்ராசஸர் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இதுதான் கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 ப்ரோ மாடல்களை இயக்குகிறது. ஐபோன் 14 மாடலானது 5என்எம் அடிப்படையிலான ஏ15 பயோனிக் சிப்பை பேக் செய்கிறது.
48எம்பி மெயின் கேமரா: ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு பிரத்யேகமான 48எம்பி மெயின் கேமராவானது லேட்டஸ்ட் ஐபோன் 15 மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் வேகமான ஆட்டோஃபோகஸை வழங்குவதற்கு பெயர்போனது. மேலும் ஐபோன் 15இல் ஸ்மார்ட் எச்டிஆர் அம்சமும் உள்ளது. இரண்டாவது கேமராவை பொறுத்தவரை, இதில் 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது.
ஐஓஎஸ் 17: ஆப்பிள் ஐபோன் 15 மாடலானது ஐஓஎஸ் 17 ஆப்ரேட்டிங் சிஸ்டமை (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) கொண்டு இயங்கும். தற்போது வரையிலாக ஐபோன் 14 மற்றும் இதர பழைய மாடல்களுக்கு இந்த லேட்டஸ்ட் ஐஓஎஸ் அனுப்படவில்லை. இது புதிய லாக் ஸ்கிரீன் லேஅவுட், லைவ் வாய்ஸ்மெயில், ஜர்னல், ஸ்டான்பை மற்றும் பிற புதிய அம்சங்களை வழங்குகிறது.
யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்: கடைசியாக மற்றும் மிக முக்கியமான மாற்றமாக ஐபோன் 15 சீரீஸில் உள்ள மற்ற எல்லா மாடல்களை போலவே ஐபோன் 15 மாடலும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் உடன் வருகிறது. மேலும் இதிலுக்க புதிய அல்ட்ரா வைட்பேண்ட் (UWB) சிப்ஸ் ஆனது ஐபோன் 15-ஐ முன்பை விட மூன்று மடங்கு அதிக ரேஞ்சில் கனெக்ட் செய்யவும் உதவும்.


Click it and Unblock the Notifications