Home
Mobile

என்னா ஸ்பீடு.. அதுக்குள்ள அடுத்த போன்-ஆ.. Lite மாடலை விட வெயிட்டான விலை & அம்சங்களுடன் OnePlus Nord 3!

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி தான் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-யின் இந்திய விற்பனை தொடங்கியது. அதற்குள் ஒன்பிளஸின் அடுத்த நோர்ட் சீரீஸ் ஸ்மாட்போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது கூடிய விரைவில் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், இது சரியாக எப்போது வெளியாகும், என்ன விலை நிர்ணயத்தை பெறும், என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற தகவல்களும் கிடைத்துள்ளது.

Lite மாடலை விட வெயிட்டான விலை & அம்சங்களுடன் OnePlus Nord 3!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனமானது இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் டெஸ்டிங்கை (Testing) தொடங்கியுள்ளது. இந்த தகவல் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரிடம் (@heyitsyogesh) இருந்து வந்துள்ளது. அவரின் கூற்றுப்படி, இது அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் வெளியிடப்படும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நார்ட் 3 ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே (1.5K AMOLED Display) கொண்டிருக்கலாம். மேலும் இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 5ஜி ப்ராசஸர் (Octa-core MediaTek Dimensity 9000 5G) பேக் செய்யப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா + 2 மெகாபிக்சல் கேமராக்கள் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனானது 5000mAh பேட்டரியுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரி 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக, இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வர அதிக வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனானது கடந்த 2021 ஜூலையில் வெளியான "பழைய" ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனை மட்டுமின்றி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனையும் கூட தூக்கி சாப்பிடும் என்பது போல் தெரிகிறது!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கும் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-ஐ நீங்கள் வாங்க விரும்பவில்லை என்றால் மோட்டோ ஜி82, சாம்சங் கேலக்ஸி எம் 53, போக்கோ எக்ஸ்5 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ அல்லது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
what a speed new oneplus phone launch soon in india all you need to know about oneplus nord 3 5g
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X