ஒன்ப்ளஸ் நடத்தும் பிளைன்ட் டெஸ்ட்; வென்றால் ஒன்ப்ளஸ் 6 ப்ரீ.!

அதன் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கிளப்பின் வண்ணம், சமீபத்தில்,ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் கேமரா மீதான பிளைன்ட் டெஸ்ட் நடந்துள்ளது.

|

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு மிக அருகில் தான் உள்ளது. அதன் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வண்ணம், ஒன்ப்ளஸ் நிறுவனம், அவ்வப்போது சில தகவல்களை மற்றும் வெளியீட்டு நிகழ்வு சார்ந்த அறிக்கைகளை, மற்றும் முக்கியமாக ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள் பற்றிய துணுக்கை நமக்கு வழங்கி வருகிறது.

அப்படியாக, அம்சங்கள் சார்ந்து வெளியான தகவல்களில் மிகவும் சுவாரசியமானது, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் கேமரா தான். அதன் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கிளப்பின் வண்ணம், சமீபத்தில்,ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் கேமரா மீதான பிளைன்ட் டெஸ்ட் நடந்துள்ளது.

பிளைன்ட் டெஸ்டின் கீழ்.?

பிளைன்ட் டெஸ்டின் கீழ்.?

இந்த பிளைன்ட் டெஸ்டின் கீழ், ஒன்ப்ளஸ் குழு ஆனது, கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல், ஐபோன் எக்ஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட மற்ற உயர் செயல்திறன் கேமரா ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களுடன் சேர்த்து ஒன்ப்ளஸ் 6 கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, மொத்தம் நான்கு பிரிவுகாளாக பிரித்து உள்ளது. அதாவது கட்டிடக்கலை, குறைந்த-ஒளி, குறைந்த-ஒளி உருவப்படம் மற்றும் உருவப்படம். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஒன்ப்ளஸ் 6 புகைப்படம் உள்ளது.

போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கிறது அல்லவா.?

போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கிறது அல்லவா.?

இந்த டெஸ்டில் பங்கேற்கும் நபர்கள், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த புகைப்படங்களை தேர்நதெடுக்க வேண்டும். இந்த டெஸ்டின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு ஒரு ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் உடன் இதர பரிசுகளும் கிடைக்கும். போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கிறது அல்லவா.? இதில் இன்னும் பெரிய சுவாரசியம் என்னவெனில் ஹை எண்ட் ஸ்மார்ட்போன்கள் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கும், மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6 கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கும், பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பது தான். ஆக, ஒன்ப்ளஸ் 6-ன் கேமராக்கள் வேற லெவலில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவின் முதல் பத்திரிக்கை அட்டைப்படம்.!

இந்தியாவின் முதல் பத்திரிக்கை அட்டைப்படம்.!

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் கேமராக்கள், ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளதை முன்னரே வெளிப்படுத்தும் வண்ணம், ஸ்மார்ட்போன் கேமரா கொண்டு எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் பத்திரிக்கை அட்டைப்படம் ஆனது வெளியானது. அதை எடுத்தது ஒன்ப்ளஸ் 6 கேமரா தான், அந்த பத்திரிக்கை பிரபல வோக் மேகஸின் ஆகும். அந்த கவர் போட்டோவில் இடம் பெற்றவரா பிரபலமான பாலிவுட் நடிகையான ஆதிதி ராவ் ஹைடிரி ஆவார். அந்த புகைப்படத்தில் இருந்து வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, ஒரு 20 எம்பி + 16 எம்பி அளவிலான இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளைன்ட் டெஸ்டில் பங்கேற்க.?

பிளைன்ட் டெஸ்டில் பங்கேற்க.?

கூறப்படும், பிளைன்ட் டெஸ்டில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யவும் : https://www.oneplus.in/blindtest-6. என் முயற்சியின் கீழ், நானொரு ரூ.300/- மதிப்பிலான வவுச்சர் ஒன்றை பெற்றேன். உங்கள் ராசி எப்படி என்பதை நீங்கள் தான் பரிசோதிக்க வேண்டும். குறிப்பிட்டுள்ளபடி, பிளைன்ட் டெஸ்ட்டில் காட்சிப்படும் புகைப்படங்கள் மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த லக்கி டிராவில் பங்குபெற ஒவ்வொருவருக்கும் 5 வாய்ப்புகள் கிடைக்கும். மே 11 முதல் 14 ஆம் தேதி வரை இந்த லக்கி டிரா போட்டி நடைபெறுகிறது.

வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமில் காண.?

வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமில் காண.?

இதற்கிடையில் ஒனப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடானது, மே 17, 2018 அன்று மும்பையில் நிகழ்கிறது. ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமில் காண இங்கே வழங்கப்பட்டுள்ள இணைப்புடன் இணைந்திருக்கவும். இதோ இணைப்பை நீங்கள் பின்பற்றலாம், https://www.oneplus.in/launch-6. மேலும் பல ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
We just can’t wait to test the upcoming OnePlus 6 camera in action. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X