Home
Mobile

பூமியில் உள்ள அனைவரும் ஏலியன் தான்.! அதிர்ச்சி தகவல்.!

பூமியோடு சுமார் பல பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மோதி நொறுங்கிய ஒரு கிரகத்திற்கு, நாம் நன்றி கூற வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியோடு சுமார் பல பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மோதி நொறுங்கிய ஒரு கிரகத்திற்கு, நாம் நன்றி கூற வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாம் பேசும் இந்த குறிப்பிட்ட மோதல் ஆனது தோராயமாக 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்து உள்ளது.

ஒன்றுகூடி உருவானதே சந்திரன்!

ஒன்றுகூடி உருவானதே சந்திரன்!

"ஜெயிண்ட் இம்பாக்ட் கருதுகோள்" எனும் ஒரு புதிய கோட்பாட்டின் கீழ், செவ்வாய் கிரகத்தின் எ;அளவில் இருக்கும் ஒரு கிரகமும், நமது பூமி கிரகமும் நிகழ்த்திய மாபெரும் மோதலின் விளைவாக ஏற்பட்ட விண்வெளி குப்பைகள் (உடைந்த பாகங்கள்) ஒன்றுகூடி உருவானதே சந்திரன் என்று கண்டு அறியப்பட்டு உள்ளது.

உயிர்க்கு தேவையான மிகுந்த உறுதியான கூறுகளை வழங்கியுள்ளது

உயிர்க்கு தேவையான மிகுந்த உறுதியான கூறுகளை வழங்கியுள்ளது

இந்த புதிய கோட்பாட்டின் மிகவும் சுவரசியாமன பகுதி என்னவென்றால், அண்டத்தல் நடந்த விபத்து தான் பூமி வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மிகுந்த உறுதியான கூறுகளை வழங்கியுள்ளது. ஆம் பூமியுடன் மோதல் நிகழ்த்திய "அந்த" கிரகம் ஆனது கந்தக நிறை மையம் கொண்ட ஒரு கரு உருவான உலகமாக இருந்து உள்ளது.

மனித உயிர் உருவானதின் ஆதிபுள்ளிகளில் ஒன்று!

மனித உயிர் உருவானதின் ஆதிபுள்ளிகளில் ஒன்று!

இது சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள் மற்றும் கணினி உருவகப்படுத்துதல்கள் ஆனது மோதி அழிந்து போன கிரகத்தில் இருந்து தான் பூமியில் வாழும் உயிரினங்கள் உருவாகி உள்ளது. குறிப்பாக உயிரினங்களில் காணப்படும் நைட்ரஜன் மற்றும் கார்பன் (மனித உயிர் உட்பட) பெரும்பாலானவை அந்த கிரகத்தில் இருந்து தான் நமக்கு கிடைத்து உள்ளது.

நீண்ட காலமாக சந்தேகப்பட்ட ஒன்றுதான்.

நீண்ட காலமாக சந்தேகப்பட்ட ஒன்றுதான்.

இது சார்ந்த ஒரு விளக்கத்தில், டெக்சாஸில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆன ராஜ்டிப் தாஸ்குப்தா பின்வருமாறு கூறி உள்ளார்: "பழங்கால விண்கற்களைப் பற்றி ஆராய்வதின் மூலமாக, சூரிய மண்டலத்தில் உள்ள பூமியும் மற்ற பாறைக் கோள்களும் சீர்குலைந்தவைகள் தான் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறார்கள்.

சூடான விவாதம் என்னெவென்றால்?

சூடான விவாதம் என்னெவென்றால்?

ஆனால், இந்த விடயத்தின் சூடான விவாதம் என்னெவென்றால், இந்த புவிசார் மூலங்கள் உருவான நேரமும், இயந்திர நுட்பமும் தான்." அதை தீர்த்து வைக்கும் புள்ளி தான் தற்போது கிடைத்துள்ளது. இந்த ஆய்வில் இருந்து, நம்மை போன்றே உள்ள மற்ற பாறைக் கோள்களில் எப்படி உயிர் ஆதாரத்தின் முக்கிய கூறுகள் அல்லது பொருட்கள் உருவாகலாம் என்பதைப் பற்றி அறியவும் உதவும். அதைத்தான் டாக்டர் தாஸ்குப்தாவும் குறிப்பிட்டு உள்ளார்.

அதிக வாய்ப்பு உள்ளதை நிரூபிக்கிறது!

அதிக வாய்ப்பு உள்ளதை நிரூபிக்கிறது!

அதாவது, "இந்த ஆய்வு ஆனது, புவி-போன்ற கிரகத்தில், உயிர்ம அத்தியாவசிய உறுப்புகளை பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதை நிரூபிக்கிறது, குறிப்பாக பல்வேறு அடுக்குகளை கொண்ட கிரகங்களின் பெரிய தாக்கங்களின் கீழ் தான் உயிர்கள் வளர்கிறது" என்று கூறி உள்ளார். இந்த ஆய்வை விளக்கம் ஆராய்ச்சிக் கட்டுரை அந்த அறிவியல் முன்னேற்றங்கள் (Science Advances) இதழில் வெளியாகி உள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

இன்றோடு குழிதோண்டு புதைத்து விடுங்கள்!

இன்றோடு குழிதோண்டு புதைத்து விடுங்கள்!

இந்த இடத்தில் ஒரு அறிவுரையும் பல கேள்விகளையும் எழுப்ப விரும்புகிறோம். அறிவுரை என்னவென்றால், பூமி என்னுடையது என்று அகம்பாவம் பிடித்து அலையும் மாந்தர் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்றால், அதை இன்றோடு குழிதோண்டு புதைத்து விடுங்கள். கேள்விகள் என்னவென்றால், செவ்வாய் கிரகத்தின் அளவில் உள்ள ஒரு கோள், பூமியோடு மோதியது என்றே வைத்து கொள்வோம், அந்த கிரகம் இப்போது எங்கே இருக்கிறது? அந்த கிரகத்தின் மிச்சம் மீதியை கூட நம்மால் ஏன் காணமுடியவில்லை?

கேள்விகளுக்கான பதில்?

கேள்விகளுக்கான பதில்?

அந்த கிரகத்தின் மீதம் தான் சந்திர கிரகத்தின் உருவாக்கம் என்று ஆய்வு கூறுகிறது. அதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால், பூமியோடு மோதிய கிரகத்தின் வாயிலாக தான் உயிர்கள் உண்டாகின என்றால்? பூமியின் இயற்கையான செயற்கை கோள் என்று அழைக்கபடும் சந்திரனிலும் அதே வாழ்க்கை கூறுகள் இருக்கலாம் என்று அர்த்தமா? - இந்த கேள்விகளுக்கான பதில்களை வரும் காலம் தான் சொல்ல வேண்டும்.

Best Mobiles in India

English summary
We Are All Aliens Life On Earth Came From Another Planet As It Smashed In And Became The Moon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X