Home
Mobile

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

By Super
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

மொபைல் உலகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பல பிரம்மிக்க வைக்கும் விஷயங்களை கொடுத்து வருகிறது. அடுத்து அடுத்து பல சாதனைகளை புரிந்து வரும் சாம்சங் நிறுவனம் புதிய மொபைல்களை அமெரிக்க சந்தையில் வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இங்கே சாம்சங் நிறுவனத்தில் பல புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை பற்றி பார்ப்போம்.

வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினை தூண்டும் ஸ்மார்ட்போன்கள் என்று எடுத்து கொண்டால் அதில் நிச்சயம் சாம்சங் நோட் ஸ்மார்ட்போனின் பெயர் வந்துவிடும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் 5.3 இஞ்ச் உயர்ந்த அமோல்டு தொடுதிரை வசதியை வழங்கும். நிறைய சிறந்த தொழில் நுட்பங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில், கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் இருக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த புதிய படைப்பை சொன்னால் சாம்சங் ரக்பி ஸ்மார்ட்போனை சொல்லலாம். 2 இஞ்ச் திரையும், 1.3 மெகா பிக்ஸ்ல கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். சாம்சங் எக்ஸிலரேட் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் II ஸ்கைராக்கெட் ஸ்மார்ட்போன்களும் அதி நவீன தொழில் நுட்பங்களை கொண்டதாக இருக்கும்.

சாம்சங் எக்ஸிலரேட் ஸ்மார்ட்போனில் 4 இஞ்ச் அகன்ற தொடு திரை வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த எக்ஸிலரேட் ஸ்மார்ட்போனையும்விட, கேலக்ஸி எஸ்-II ஸ்கைராக்கெட் ஸ்மார்ட்போன் அதிக திரை வசதியை கொண்டதாக இருக்கும். ஸ்கைராக்கெட் ஸ்மார்ட்போன் 4.65 இஞ்ச் திரை வசதியை வழங்கும்.

இங்கே கூறப்பட்டுள்ள சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டிய சாம்சங் நிறுவனம், புதிய தொழில் நுட்ப படைப்புகளின் மூலம், அமெரிக்க வாடிக்கையாளர்களையும் தன் வசம் ஈர்க்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X