சூப்பராய் விற்பனையான சூப்பர்போன்கள் : சூப்பர் சலுகைகளோடு நன்றி தெரிவித்த நிறுவனம்.!

Written By:

லீஇகோ நிறுவனம் சிறிய காலகட்டத்தில் இந்தியாவின் பிரபலமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சில சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன் படி தனித்துவம் வாய்ந்த லீஇகோ சூப்பர்போன் கருவிகளான லீ2, லீ மேக்ஸ்2 மற்றும் லீ 1எஸ் இகோ உள்ளிட்ட கருவிகள் ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பிளிப்கார்ட் மற்றும் லீஇகோவின் சொந்த லீமால் தளத்திலும் விற்பனை செய்யப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளை லீமால் தளத்தில் வாங்கும் போது எச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பிரத்தியேகமாக சுமார் 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகின்றது.

இலவசம்

இலவசம்

இதோடு லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவசங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

லீஇகோ சூப்பர்போன்களை பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது லீ 2, லீ மேக்ஸ் 2 மற்றும் லீ 1எஸ் கருவிகளுக்கு அனைத்துச் சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் பெற முடியும்.

வரவேற்பு

வரவேற்பு

இந்தியாவில் வெளியானது முதல் லீ சூப்பர்போன் கருவிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உயர் ரக அம்சங்கள் மற்றும் மிகக் குறைந்த விலையில் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தக் கருவிகள் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பிளாஷ் விற்பனை

பிளாஷ் விற்பனை

லீஇகோ சார்பில் நடத்தப்பட்ட அனைத்து பிளாஷ் விற்பனையும் அமோக வெற்றிபெற்றது. இதோடு லீஇகோ கருவிகளுடன் இலவச லீஇகோ சந்தாவும் வழங்கப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Watch out for a one-in-a-million offer on LeEco Superphones!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot