செல்போன் சூடாகிறதா?- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்

|

இன்றைய காலக் கட்டத்தில் செல்போன் இல்லாத நபர்களை சந்திக்க நேர்ந்தால், அவர் எதோ வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களை போல் காணும் மனநிலை பெரும்பாலானோரிடம் நிலவி வருகிறது. ஏனென்றால் செல்போன் உபயோகம் என்பது அந்தளவு அத்தியாவசியமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக செல்போன் இல்லாத இளைஞர்கள் கணக்கிட்டால் விரல்விட்டு எண்ணிவிடலாம். மேலும் ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் போட்டிப்போட்டுக் கொண்டு, அனைவரையும் ஈர்க்கும் விதமாக புது மாடல் செல்போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

செல்போன் வெடித்து சிதறியது.,

செல்போன் வெடித்து சிதறியது.,

செல்போன் தொடர்பாக அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் செய்திகளில் ஒன்று செல்போன் வெடிக்கும் சம்பவம். சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசும் போது செல்போன் வெடித்தது, வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்தது, பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென செல்போன் வெடித்தது, தூங்கிக் கொண்டிருக்கும் போது செல்போன் வெடித்தது என பலவகை நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.

நாளொன்றுக்கு 20 போன் வெடிப்பதாக தகவல்

நாளொன்றுக்கு 20 போன் வெடிப்பதாக தகவல்

சமீபத்தில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20 செல்போன்கள் வெடிப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்ன.,

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்ன.,

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும்

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும்

எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தடுக்கவும்

குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தடுக்கவும்

மேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.

தண்ணீருக்குள் விழுந்தால் ஆன் செய்ய வேண்டாம்.,

தண்ணீருக்குள் விழுந்தால் ஆன் செய்ய வேண்டாம்.,

மொபைல் போன் ஒரு வேலை தண்ணீருக்குள் விழுந்தால் அதை சிறிது நேரம் கலட்டி வைத்து விட்டு ஆன் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் ஒருவேலை ஆன் ஆகலாம் ஆனால் அதை அப்படியே சார்ஜ் போடும் போது சார்ட்டேஜ் ஏற்பட்டு பேட்டரி உடனடியாக சூடாகி வெடித்துவிடவும் வாய்ப்பு உள்ளது. முறையாக சர்வீஸ் செய்த பிறகு ஆன் செய்ய வேண்டும்.

நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்.,

நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்.,

அதேபோல், மொபைல் போனில் பல்வேறு அப்ளிகேஷன் ரன்னிங்கில் இருக்கும், அந்த நேரத்தில் நீண்ட நேரம் இன்டெர்நெட் பயன்படுத்துவதால் பேட்டரி சூடாகத் தொடங்கும். அதை அப்படியே கவனிக்காமல் விட்டிருக்கும் சமயத்தில் பேட்டரி பருமன் அடைந்து செல்போன் வெடித்து விடுகிறது. அதேபோல் அதிக நேரம் இன்டெர் நெட் பயன்படுத்துகையில் பேட்டரி சூடாக இருக்கும், உடனடியாக போன் பேசும் போது சிக்னல் கிடைப்பதால் பேட்டரி வேகமாக சூடாகி வெடித்து விடும். எனவே அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் சிறிது நேரத்துக்கு பிறகே செல்போன் பயன்படுத்தலாம்.

மனதுக்கும் செல்போனுக்கும் ஓய்வு வேண்டும்.,

மனதுக்கும் செல்போனுக்கும் ஓய்வு வேண்டும்.,

மற்ற சார்ஜரை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும், செல்போனுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்க வேண்டும், நாள் ஒன்றுக்கு செல்போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும், அவ்வப்போது ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷனை நிறுத்தி வைக்க வேண்டும். மொபைல் போனின் நச்சரிப்பை தகர்த்து செடி மண்ணின் உச்சரிப்பை கேட்டால் மனதுக்கும் நிம்மதி கிடைக்கும், செல்போனுக்கும் ஓய்வு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
WARNING Signs That Your Phone is Going to Blast

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X