ஸ்மார்ட்போன் யுத்தம்: எல்ஜி த்ரில் Vs எச்டிசி சென்சேஷன்!

By Super
|
ஸ்மார்ட்போன் யுத்தம்: எல்ஜி த்ரில் Vs எச்டிசி சென்சேஷன்!
முன்பெல்லாம் பணக்கார பையன்களின் காஸ்ட்லி விளையாட்டு பொம்மை என வர்ணிக்கப்பட்ட 'ஸ்மார்ட்போன்கள்' இன்றைக்கு சாதாரண இளைஞர்களின் கைகளிலும் தவழ ஆரம்பித்துவிட்டன.

ஒவ்வொரு செல்போன் தயாரிப்பு நிறுவனமும் தங்களுக்கென எக்ஸ்க்ளூஸிவாக ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளன.

முன்பெல்லாம் ஸ்மார்ட்போன் என்றால் குறைந்தது ரூ 35000 வைக்க வேண்டும். இன்றைக்கு அதன் விலை ரூ 18000 வரை வந்துவிட்டது. இந்த விலைக் குறைவே பெரும் போட்டிக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது.

எந்த நிறுவனமாக இருந்தாலும், அதன் மொபைல் மாடல்களின் முக்கிய இலக்கு இந்தியச் சந்தைதான்.

இந்தியாவில் இன்று பிரபலமாக திகழும் எல்ஜி மற்றும் எச்டிசி ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்புகள் பற்றி இன்றைக்கு பார்க்கலாம். எல்ஜி தனது மாடலை 'த்ரில்' என்றும், எச்டிசி தனது மாடலை 'சென்சேஷன்' என்றும் அறிமுகப்படுத்தியுள்ளன.

இரண்டு போன்களுமே வெகு கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி விலை கொண்டிருப்பதால், எது பெஸ்ட் என்ற கேள்விக்கு விடை காண்பது கடினமான சமாச்சாரமாக உள்ளது.

இவற்றின் வசதிகள் குறித்த புள்ளி விவரம் வேண்டுமானால், எதை வாங்குவது என்று முடிவெடுக்க உங்களுக்கு உதவக்கூடும்.

இதோ...

எல்ஜி த்ரில் மற்றும் எச்டிசி சென்சேஷன் இரண்டுமே செம ஸ்லிம்மான தோற்றம் கொண்டவை. ஸ்டைல் மற்றும் அழகு இரண்டிலுமே ஸ்கோர் பண்ணுகின்றன. இரண்டு மொபைல்களிலுமே 4.3 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எல்ஜியின் ஸ்பெஷல், 3 டி டிஸ்ப்ளே என்பது கூடுதல் சிறப்பு.

கேமரா விஷயத்தில் எச்டிசி கூடுதல் வசதி கொண்டது. இதில் 8 மெகா பிக்சல் கேமரா உள்ளது. அதிகபட்ச துல்லியத்துடன் வீடியோவை பதிவு செய்ய முடியும். எல்ஜியிலும் 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்ய முடியும். ஆனால் இதில் உள்ள கேமரா 5 மெகா பிக்சல் கொண்டது.

இரண்டிலுமே டிஜிடல் ஜூம், ஆட்டோ போகஸ் வசதி உண்டு. டிவியில் பார்ப்பது போல அகன்ற திரையில் படம் பார்க்கலாம்.

இரண்டு மாடல்களிலுமே ஆன்ட்ராய்ட் ஆபரேடிவ் சிஸ்டமில் இயங்கும் அளவு அதிவேக புராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் எச்டிசி மட்டும் 2.3 ஜிஞ்சர்பிரட் வெர்ஷனில் இயங்குகிறது. எல்ஜியில் வேறு செட்டப்... 2.2 ப்ரோயோ வெர்ஷனில் இது இயங்குகிறது. மல்டி ஃபங்ஷன் என வரும்போது ப்ரோயோ ஓஎஸ்ஸில் சில பிரச்சினைகள் உள்ளன. இதிலும் எச்டிசி ஸ்கோர் பண்ணி விடுகிறது.

ப்ளூடூத், வை-ஃபி, ஜிபிஆர்எஸ், எட்ஜ், ஹை ஸ்பீட் 3 ஜி, 4 ஜி நெட்வொர்க்குக்கு மாறும் வசதி என கனெக்டிவிட்டியில் இரண்டு மாடல்களுமே சூப்பர்!

வசதிகளில் மட்டுமல்ல...விலையிலும் கூட இந்த இரண்டு மாடல்களுமே ஒன்றுதான், ரூ 35000!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X