Home
Mobile

நோக்கியாவின் என்9 மற்றும் இ7ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீடு

By Super
நோக்கியாவின் என்9 மற்றும் இ7ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீடு
இந்திய மொபைல்போன் மார்க்கெட்டின் பிரிக்கமுடியாத அங்கமான நோக்கியா புதுமை அம்சங்களை கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் புதுமை அம்சங்கள் நிறைந்த என்9 என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று சந்தையில் களமிறக்கியுள்ளது நோக்கியா.

இந்த நிலையில், சந்தையில் ஏற்கனவே பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கும் நோக்கியா இ7மற்றும் என்9 ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிறப்பு பார்வை

இரண்டு போன்களும் தொடுதிரை(டச் ஸ்கிரீன்) வசதிகொண்டவை. ஆனால், இ7போனின் திரை 4 இஞ்ச் கொண்டதாகவும், என்9 போனின் திரை 3.9 இஞ்ச் கொண்டதாகவும் இருக்கிறது. திறந்து மூடும் ஸ்லைடர் வடிவமைப்புடன் வந்துள்ள என்9 போனில் ஆங்கில எழுத்துக்களை எளிதாக டைப் செய்யும் விதமாக தனித்தனி பட்டன்களும் (கிவெர்ட்டி கீபேடு) உள்ளது.

புதிய என்9 போன் முழுக்க முழுக்க இளசுகளை கவரும் வகையில் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு போன்களிலும் டியூவல் எல்இடி பிளாஷ் கொண்ட 8 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தவிர, முகப்பில் உள்ள விஜிஏ கேமரா வீடியோ காலிங் வசதியை கொடுக்கிறது. இரண்டு கேமராக்களும் 720 பி வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்டது.

தகவல்தொடர்பு அம்சங்களை பொறுத்தவரை புளூடுத், வை-பை மற்றும் அதிவேக 3ஜி உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும், தகவல் பரிமாற்ற வேகத்தில் என்9 சபாஷ் பெறுகிறது.

இரண்டு போன்களும் லேட்டஸ்ட் மல்டிமீடியா தொழில்நுட்பங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. வீடியோ பிளேயர், எப் ரேடியோ உள்பட அனைத்து மீடியா பார்மெட்டுகளை இயக்கும் திறன்கொண்டதாக உள்ளது. ஹெட்செட் மற்றும் இதர ஸ்பீக்கர்களுடன் இணைக்கும் வகையில் தனி ஸ்லாட் உள்ளது.

தகவல்தொடர்பு அம்சங்களை பொறுத்தவரை புளூடுத், வை-பை மற்றும் அதிவேக 3ஜி உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும், தகவல் பரிமாற்ற வேகத்தில் என்9 சபாஷ் பெறுகிறது.

நோக்கியா இ7 ஸ்மார்ட்போன் சிம்பையன் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. நோக்கியா என்9 போனில் மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. சிம்பையனை ஒப்பிடும்போது, மீகோ ஓஎஸ் எளிதாகவும், அதிவேகமாகவும் செயல்படுகிறது.

இரண்டு போன்களும் ரூ.25,000 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், நோக்கியா என்9 விற்பனை மையங்களில் ரூ.27,000 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டைல் மற்றும் வசதிகளை பார்க்கும்போது என்9 ஸ்மார்ட்போனே சிறந்ததாக தோன்றுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X