2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!

|

என்னதான் சூப்பரான கேமரா இருந்தாலும்... பெரிய டிஸ்பிளே இருந்தாலும்.. பவர்ஃபுல் ஆன ப்ராசஸர் இருந்தாலும்.. அந்த போன்ல போதுமான அளவு பேட்டரி (லைஃப்) இல்லனா.. மேட்டர் ஓவர்.. அதுக்கு சார்ஜ் போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியது தான்!

இதனால் தான் எந்தவொரு அம்சத்தை காட்டிலும் ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு நல்ல பேட்டரியை பேக் செய்யும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால்.. குறிப்பாக நீங்களொரு Samsung பிரியர் என்றால்? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஏனெனில் 5000mAh பேட்டரியை பேக் செய்யும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்களை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்!

10. Samsung Galaxy M13 5G

10. Samsung Galaxy M13 5G

இந்த பட்டியலில் நாம் பார்க்க போகும் முதல் ஸ்மார்ட்போன் - கேலக்ஸி எம்13 5ஜி ஆகும். இது 6.5 இன்ச் FHD+ PLS LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர், 50MP டூயல் ரியர் கேமரா செட்டப், 5MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. இது 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 ஆகும்.

9. Samsung Galaxy M32 5G

9. Samsung Galaxy M32 5G

இந்த பட்டியலில் உள்ள அடுத்த எம் சீரீஸ் ஸ்மார்ட்போன் Samsung Galaxy M32 5G ஆகும். இது 6.5 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளே, MediaTek Dimensity 720 ப்ராசஸர், 48MP குவாட் ரியர் கேமரா செட்டப், 13MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. இது 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.18,999 ஆகும்.

8. Samsung Galaxy F42 5G

8. Samsung Galaxy F42 5G

இந்த பட்டியலில் வரும் முதல் எஃப் சீரிஸ் மாடல் - Samsung Galaxy F42 ஆகும். இது 6.6-inch FHD+ TFT LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர், 64MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 8MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. இதன் விலை ரூ.16,447 ஆகும்.

7. Samsung Galaxy M53 5G

7. Samsung Galaxy M53 5G

மீடியாடெக் டைமன்சிட்டி 900 கொண்டு இயங்கும் Samsung Galaxy M53 ஆனது 6.7-இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே, 108MP குவாட் ரியர் கேமராக்கள், 32MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களோடு சேர்த்து 5000mAh பேட்டரியையும் பேக் செய்கிறது. இதன் விலை ரூ.26,499 ஆகும்.

6. Samsung Galaxy A13

6. Samsung Galaxy A13

எக்ஸிநோஸ் 850 ப்ராசஸர் கொண்டு இயங்கும் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 50MP குவாட் ரியர் கேமராக்கள், 8MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.16,499 ஆகும்.

5. Samsung Galaxy A23

5. Samsung Galaxy A23

குவால்காம் SM6225 ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 6.6-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 50MP குவாட் ரியர் கேமரா செட்டப், 8MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது. 5000mAh பேட்டரியை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,975 ஆகும்.

4. Samsung Galaxy A32

4. Samsung Galaxy A32

மீடியாடெக் ஹீலியோ G80 கொண்டு இயங்கும் இந்த Samsung ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே, 64MP குவாட் ரியர் கேமரா செட்டப், 20MP கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரியையும் பேக் செய்கிறது. இதன் விலை ரூ.20,600 ஆகும்.

3. Samsung Galaxy A33 5G

3. Samsung Galaxy A33 5G

சாம்சங்கின் இந்த மிட்-ரேன்ஜ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, எக்ஸிநோஸ் 1280 ப்ராசஸர், 48MP குவாட் ரியர் கேமரா செட்டப், 13MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது மற்றும் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 25,499 ஆகும்.

2. Samsung Galaxy A53 5G

2. Samsung Galaxy A53 5G

சாம்சங்கின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது, 6.5 இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்ஸிநோஸ் 1280 ப்ராசஸர், 64MP குவாட் ரியர் கேமரா செட்டப், 32MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது மற்றும் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.31,499 ஆகும்.

1. Samsung Galaxy S22 Ultra 5G

1. Samsung Galaxy S22 Ultra 5G

இந்த பட்டியலின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் - சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஆகும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர், 6.8 இன்ச் 120Hz டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 108MP + 10MP + 10MP + 12 MP குவாட் ரியர் கேமரா செட்டப், 40MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. இதன் விலை ரூ.1,09,999 ஆகும்.

Best Mobiles in India

English summary
Want to Buy Samsung Smartphone with Good Battery Life? Here are the Top 10 Best 5000mAh Battery Phones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X