Home
Mobile

iPhone ஆசை: இந்த சீக்ரெட்-ஐ புரிஞ்சிக்கிட்டா போதும்.. நீங்க தான் பிஸ்தா!

யாருக்குத்தான் ஐபோன்கள் மீது ஆசை இல்லை! ஆயிரம் தான் இருந்தாலும் iPhone போல வருமா? என்று நினைக்காத ஆண்ட்ராய்டு வாசிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்!

அப்படியான "ஐபோன் ஆசை" உங்களுக்கு இருந்தால்.. எப்படியாவது ஒரு ஐபோனை வாங்கி விட வேண்டும் என்கிற ஏக்கம் இருந்தால்... கொஞ்சம் நிதானமாக இருக்கவும்!

ஏன்?

ஏன்?

நீங்கள் ஒரு புதிய ஐபோன் மாடலை வாங்க நினைத்தால், தற்போதைக்கு பொறுமையாக இருக்கவும்; இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் - அடுத்த ஒரு வாரம் பொறுமையாக இருக்கவும்.

அப்படி பொறுமை காத்தால், ஐபோன் வாங்குவதற்காக நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை மிச்சப்படுத்தலாம்.

அதெப்படி?

அதெப்படி?

வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆப்பிள் நிகழ்வின் காரணமாகவே, கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி நாங்கள் உங்களை அறிவுறுத்துகிறோம்.

செப்.7 ஆம் தேதி நடக்கவுள்ள நிகழ்விற்கு ஆப்பிள் நிறுவனம் "ஃபார் அவுட்" என்று பெயரிட்டுள்ளது, அந்நிகழ்வில் புத்தம் புதிய iPhone 14 சீரிஸ் அறிமுகமாக உள்ளது!

புதுசு வந்தா.. பழசுக்கு ப்ரைஸ் கட்!

புதுசு வந்தா.. பழசுக்கு ப்ரைஸ் கட்!

எப்போதுமே, தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் காரணமாக புதிய ஐபோன் மாடல்கள் பழைய / முந்தைய ஜெனரேஷன் ஐபோன் மாடல்களை விட சற்றே விலை உயர்ந்ததாக இருக்கும்.

இது ஒரு வழக்கமான விதிமுறை தான். அதே போல புதிய மாடல்கள் அறிமுகமானதும், உடனே பழைய ஐபோன் மாடல்களின் விலைகள் குறைக்கப்படும்; இதுவும் வழக்கமான விதிமுறை தான்; இதை புரிந்துகொண்டால் போதும் நீங்கள் 'பிஸ்தா'வாகி விடலாம்!

புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நீங்கள் பிஸ்தா தானே?

புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நீங்கள் பிஸ்தா தானே?

ஐபோன் 14 சீரீஸ் அறிமுகமான வேகத்தில் ஐபோன் 13 அல்லது ஐபோன் 12 மீது பெரிய அளவிலான விலைக்குறைப்பு மற்றும் தள்ளுபடிகளை, நாம் எதிர்பார்க்கலாம்!

எடுத்துக்காட்டாக, ஆப்பிள் ஐபோன் 13-ஐ அறிமுகப்படுத்தியபோது, ​​​​64 ஜிபி ஸ்டோரேஜை கொண்ட ஐபோன் 12-இன் விலையானது ரூ.74,900 லிருந்து ரூ.64,900 ஆக குறைக்கப்பட்டது. மேலும் ஐபோன் 11 மாடலின் மீது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது.

இம்முறை என்னென்ன மாடல்களின் விலை குறைக்கப்படும்?

இம்முறை என்னென்ன மாடல்களின் விலை குறைக்கப்படும்?

இந்த ஆண்டு, ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமானதுமே, ஆப்பிள் ஐபோன் 12 மினி மீது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்படலாம்.

இது உண்மையாகும் பட்சத்தில், ஐபோன் SE உடன் சேர்ந்து சந்தையில் வாங்க கிடைக்கும் மலிவான 5G ஐபோன்களில் 12 மினி மாடலும் இணையும்!

iPhone 14 மாடல்களை ஆசை இருந்தால்.. அதை மறந்துடுங்க!

iPhone 14 மாடல்களை ஆசை இருந்தால்.. அதை மறந்துடுங்க!

ஏனெனில், ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலைகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் மற்றும் உலகப் பொருளாதார நிலைமைகள் போன்ற பல காரணிகளால் இந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்களின் விலைகள் நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம்.

அதிகம் என்றால்.. எவ்வளவு அதிகமாக இருக்கும்?

அதிகம் என்றால்.. எவ்வளவு அதிகமாக இருக்கும்?

பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோவின் கூற்றுப்படி, "மதிப்பிடப்பட்ட ஐபோன் 14 சீரிஸின் Average Selling Price (ASP) ஆனது ஐபோன் 13 சீரிஸின் ASP உடன் ஒப்பிடும் போது சுமார் 15% அதிகரிக்கும். அதாவது 1,000 முதல் 1,050 அமரிக்க டாலர்கள் என்கிற உயர்வை சந்திக்கும்".

எப்போது முதல் வாங்க கிடைக்கும்?

எப்போது முதல் வாங்க கிடைக்கும்?

சமீபத்திய வதந்திகளின் படி, ஆப்பிள் பின்பற்றும் பொதுவான போக்கின் அடிப்படையில், ஐபோன் 14 சீரீஸ் ஆனது செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வரக்கூடும்.

அதற்கு முன்பே அல்லது அதற்கு பின்னர், பழைய ஐபோன் மாடல்களின் மீதான விலைகுறைப்புகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! அதுவரையிலாக கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!

Best Mobiles in India

English summary
Want to Buy New iPhone in 2022 at Low Price Then You Need To Know This Trick
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X