வாங்குனா.. Samsung-ன் இந்த மூன்று 5G போன்களில் 1-ஐ மட்டுமே வாங்குங்க.. இல்லனா காசு வேஸ்ட்டு! ஏன் அப்படி?

|

நீங்கள் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை (5G Smartphone) வாங்க வேண்டும் என்கிற தேடலில் இருந்தால், அதிலும் குறிப்பாக - வாங்கினால் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 5ஜி போன்களை தான் வாங்குவேன் என்று அடம் பிடிப்பவர்கள்.. கீழ்வரும் மூன்று மாடல்களில் ஒன்றை வாங்குவதே இப்போதைக்கு நல்லது!

அதென்ன மாடல்கள்? அந்த மூன்று மாடல்களில் அப்ப என்ன ஸ்பெஷல்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

5ஜி ஆதரவு இருந்தால் மட்டும் போதுமா?

5ஜி ஆதரவு இருந்தால் மட்டும் போதுமா?

சாம்சங் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் பல எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்கள் ஆனது 5ஜி-க்கான ஆதரவை கொண்டுள்ளன.

ஆனால் இங்கே எழும் ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால்.. நீங்கள் வாங்கும் ஒரு ஸ்மார்ட்போனில் 5ஜி சப்போர்ட் இருந்தால் மட்டுமே போதுமா? என்பதே ஆகும்!

அந்த கேள்விக்கான பதில் - போதாது; அந்த ஸ்மார்ட்போனிற்கு 5ஜி ஆதரவோடு சேர்த்து, நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டும் வேண்டும்!

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

சாம்சங்கின் லேட்டஸ்ட் ஓஎஸ் எது?

சாம்சங்கின் லேட்டஸ்ட் ஓஎஸ் எது?

சாம்சங்கின் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் என்று நாங்கள் இங்கே குறிப்பிடுவது - ஒன் யுஐ 5 (One UI 5) அப்டேட்டை தான்!

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் பல வகையான கேலக்ஸி இசட் ஃபோல்ட், ஃபிளிப் சீரிஸ், ஏ சீரீஸ், எஃப் சீரீஸ் மற்றும் எம் சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5 அப்டேட் அணுக கிடைக்கும்.

ஏற்கனவே, கேலக்ஸி S22 அல்ட்ரா, கேலக்ஸி S22, கேலக்ஸி S21 FE, கேலக்ஸி S20 FE மற்றும் பல போன்களில் One UI 5 அப்டேட் கிடைக்கிறது!

இந்தியாவில் இந்த மூன்று 5ஜி போன்களுக்கும்!

இந்தியாவில் இந்த மூன்று 5ஜி போன்களுக்கும்!

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லேட்டஸ்ட் ஒன் யுஐ 5 அப்டேட் ஆனது இந்தியாவில் வாங்க கிடைக்கும் 3 ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் வந்து சேர்ந்துள்ளது.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த மூன்றுமே சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஆகும். ஆக நீங்களொரு - சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால் கீழ்வரும் 3 மாடல்களில் ஒன்றை வாங்குவது தான் புத்திசாலித்தனம்.

ஏனென்றால், 5ஜி போனிற்கு அப்கிரேட் ஆன மாதிரியும் இருக்கும், அதே சமயம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டின் அம்சங்களை அனுபவித்த மாதிரியும் இருக்கும்!

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

அதென்ன மாடல்கள்?

அதென்ன மாடல்கள்?

நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி ஏ33 (Galaxy A33), கேலக்ஸி ஏ53 (Galaxy A53) மற்றும் கேலக்ஸி ஏ73 (Galaxy A73) மாடல்கள் ஆகும்.

தற்போது இந்த மூன்று 5G மாடல்களுமே One UI 5.0 அப்டேட் வழியாக மிகவும் புதுமையான வாய்ஸ் ஃபோகஸ் அம்சத்தை (Voice Focus) கொண்டு வருகிறது.

இந்த புதிய வாய்ஸ் ஃபோகஸ் அம்சமானது, நீங்கள் போன் பேசும் போது உங்கள் பின்னணியில் ஏற்படும் இரைச்சல்களை தடுத்து, உங்களின் குரலை மட்டும் "பிரித்து", அழைப்பின் மறுபுறத்தில் உள்ளவருக்கு தெளிவான ஆடியோவை அனுப்பும் திறனை கொண்டுள்ளது!

புதிய One UI அப்டேட் வழியாக வேறு என்னென்ன அம்சங்கள் கிடைக்கும்?

புதிய One UI அப்டேட் வழியாக வேறு என்னென்ன அம்சங்கள் கிடைக்கும்?

சாம்சங்கின் லேட்டஸ்ட் One UI அப்டேட் ஆனது பரந்த அளவிலான கலர்ஸ் மற்றும் பேட்டர்ன்ஸை கொண்ட புதிய பேக்கிரவுண்ட் போட்டோக்களுடன் வருகிறது. மேலும் பல்வேறு ப்ரீசெட் இமேஜஸ், டைனமிக் லாக் ஸ்கிரீன்ஸ் மற்றும் கேலரி போட்டோக்களில் இருந்தும் பேக்கிரவுண்ட்-ஐ செட் செய்யலாம்!

அதுமட்டுமின்றி - கேலரியில் ஸ்டிக்கர்களையும் உருவாக்கலாம், ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) அடிப்படையிலான எமோஜிஸ் மூலம் கஸ்டம் கால் பேக்கிரவுண்ட்டை உருவாக்கலாம், இப்படி பலவற்றையும் செய்யலாம்.

அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?

ஓஎஸ்-னு வந்துட்டா கூகுளை தூக்கி சாப்பிடும் சாம்சங்.. அதெப்படி?

ஓஎஸ்-னு வந்துட்டா கூகுளை தூக்கி சாப்பிடும் சாம்சங்.. அதெப்படி?

நான்கு வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை வழங்கும் ஒரே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்றால் - அது சாம்சங் தான். 4 வருடங்கள் என்பது, கூகுள் நிறுவனம் தன் பிக்சல் போன்களுக்கு வழங்குவதை விட ஒரு வருடம் அதிகம் ஆகும்.

அதுமட்டுமின்றி, Galaxy மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான Security software support-ஐயும் சாம்சங் வழங்குகிறது. இதுபோன்ற சில வரவேற்கத்தக்க நடவடிக்கைகளால் தான் சாம்சங் நிறுவனம், ஒரு பெரிய எண்ணிக்கையிலான விசுவாசமான வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Want to buy best 5G Smartphone From Samsung Choose any 1 from these 3 models which has One UI 5 Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X