வாமி டைட்டன் 3 பேப்லட் வெளியானது...!

Written By:

இன்று ஏற்கனவே இந்தியாவில் மொபைல் கம்பெனிகள் அடித்துக் கொண்டு இருக்கின்றன தற்போது அவைகளுடன் போட்டியிட புதிதாக ஒரு பேப்லட் வந்துள்ளது.

wickedleak கம்பெனி வெளியிடும் Wammy Titan 3 என்ற பேப்லட் தான் இந்த போட்டியில் தற்போது குதித்துள்ளது.

ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் பிரபலமான இந்த கம்பெனியின் பேப்லட் தற்போது வெளிவந்துள்ளது இது மக்களிடத்திலும் ஒரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

5.7 இன்ச் டிஸ்பிளேவுடன் இந்த பேப்லட் வெளிவருகிறது மேலும் பேப்லட் வேகமாக இயங்க 1.5GHz quad-core MediaTek 6589 Turbo processor பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் 1GB க்கு ரேம் 16GB க்கு இன்பில்ட் மெமரி டூயல் சிம் என அனைத்தையும் கொண்டு வெளிவருகிறது, இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

வாமி டைட்டன் 3 பேப்லட் வெளியானது...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஆண்ட்ராய்டு 4.3 வந்தாச்சு ஆனா இவங்க ஏன் 4.2 ல வெளிவிடறாங்கன்னு தெரியலைங்க, அடுத்து கேமரா, இதில் 13MP க்கு கேமராவும், 5MP க்கு பேக் கேமராவும் கொண்டு கிடைக்கிறது இந்த பேப்லட்.

அடுத்து இதர விசயங்களான Bluetooth, Wi-Fi, micro-USB மற்றும் 3G எல்லாமே இருக்குங்க இதுல இதன் தற்போதைய விலை ரூ.16,990 என வைக்கப்பட்டுள்ளது விரைவில் குறைய வாய்ப்புள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot