பிப்., 4 உறுதி: காத்திருந்தது போதும்.. சேமித்த காசுக்கு தகுதியான ஒரு 5ஜி போன் வாங்கலாம்!
இந்தியாவில் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. ஆரம்ப கால கட்டம் என்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. 4ஜி இணைய வேகமே சிறப்பாக இருக்கிறதே 5ஜி எப்படி இருக்கும் என அறிய பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இதையடுத்து பலரும் புது 5ஜி போன் வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றனர். அதன்படி நீங்கள் புதிய 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் பிப்.,4 வரை காத்திருப்பது நல்லது.

காத்திருந்தால் சிறந்த 5ஜி போன் வாங்கலாம்..
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி ஆதரவுடன் கூடிய போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் உச்ச விலையில் இருந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் தற்போது பட்ஜெட் விலையிலும் கிடைத்து வருகிறது. பலரும் புதிய 5ஜி போன் வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். அதன்படி நீங்கள புதிய 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த Infinix Zero 5G போனை வாங்கலாம்.
மிட்-ரேன்ஜ் விலையில் Infinix Zero 5G
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் அதிகப் படியான அம்சங்கள் இடம்பெறாது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்றால் குறிப்பிடத்தக்க மேம்பட்ட அம்சங்கள் கொண்ட மிட் ரேன்ஜ் போனை வாங்குவதே சிறந்த முடிவாக இருக்கும். அப்படியான ஒரு மிட் ரேன்ஜ் போன் தான் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆகும்.
பிப்ரவரி 4 இந்தியாவில் அறிமுகம்
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் Infinix Zero 5G போன் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்திருக்கிறது. மேலும் இந்த புதிய போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் இல் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது உலக சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகமானது. இதன்மூலம் இந்த போனின் அம்சங்கள் அனைத்தும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.
புதிய இன்ஃபினிக்ஸ் போன் விலை
முதலில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவலை பார்க்கலாம். இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது $239 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் ஏறத்தாழ இதே விலைப்பிரிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ண விருப்பத்தில் வெளியானது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 12 அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இது இயங்குகிறது.
5000mAh பேட்டரி ஆதரவு
Infinix Zero 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் ஃபுல் எச்டி+ ஐபிஎஸ் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 5ஜி எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும். இதில் 50 பிரதான கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். கூடுதல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் டூயல் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
50MP ப்ரைமரி ஷூட்டர்
சற்று விரிவாக அம்சங்களை பார்க்கையில், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Brightness) உடன் கூடிய 6.78' இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே இதில் இருக்கும். டிஸ்ப்ளேயின் மேல் மையப்பகுதியில் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.16 MP செல்ஃபி கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் உள்ளது. அது 50MP ப்ரைமரி ஷூட்டர், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை ஆகும். பாதுகாப்பு வசதிக்கு என போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், பிரத்தியேகமான மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக்கும் உள்ளது.


Click it and Unblock the Notifications








