முதன்முறையாக ஸ்மார்ட்போனில் எடுத்த போட்டோ பத்திரிக்கையின் அட்டை படமாகியது.!

அந்த புகைப்படத்தை பதிவிட்ட பத்திரிகை, பிரபல பேஷன் மேகஸின் ஆன வோக் (Vogue) மற்றும் அந்த புகைப்படத்தை எடுக்க உதவிய ஸ்மார்ட்போன் - ஒன்ப்ளஸ் 6 ஆகும்.

|

கடந்த சில ஆண்டுகளிலேயே, கேமரா துறையில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண முடிந்தது. குறிப்பாக ஸ்மார்ட்போன் கேமராக்கள் ஆனது, எந்த அளவிலான எல்லைகளை தொடக்கூடும் என்பதை, இந்த உலகம் சமீப காலமாக கண்டு வருகிறது.

ஒரு ஸ்மார்ட்போன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து என்னென்ன செய்யலாம்.? ஸ்மார்ட்போன்கள் கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.? போன்ற கேள்விகளை எழுப்பினால் : சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளில் பகிரலாம், வீடியோக்களை பதிவு செய்யலாம் போன்ற, சாதாரண பணிகளுக்கு தான் தேவைப்படும். அது தான் அவைகளின் எல்லையும் கூட என்கிற பதில்கள் கிடைக்கும்.

இதை விட சிறப்பான முறையில் ஒரு ஸ்மார்ட்போன் கேமராவின் திறமையை வெளிப்படுத்த முடியாது.!

இதை விட சிறப்பான முறையில் ஒரு ஸ்மார்ட்போன் கேமராவின் திறமையை வெளிப்படுத்த முடியாது.!

ஆனால், அந்த எல்லைகளை உடைக்கும் வண்ணம், இந்தியாவிலேயே முதன் முறையாக, ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படமானது, ஒரு பேஷன் பத்திரிகையின் அட்டைப்படத்தில் பிரசுரமாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பதிவிட்ட பத்திரிகை, பிரபல பேஷன் மேகஸின் ஆன வோக் (Vogue) மற்றும் அந்த புகைப்படத்தை எடுக்க உதவிய ஸ்மார்ட்போன் - ஒன்ப்ளஸ் 6 ஆகும். இதை விட சிறப்பான முறையில் ஒரு ஸ்மார்ட்போன் கேமராவின் திறமையை வெளிப்படுத்த முடியாது.

கோடை காலத்தை கழிக்கும் கான்செப்ட்டின் கீழ்.!

கோடை காலத்தை கழிக்கும் கான்செப்ட்டின் கீழ்.!

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் காட்சிப்படுபவர், வேறு யாருமில்லை, காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமில் திரையுலகில் அறிமுகமான பிரபலமான பாலிவுட் நடிகையான ஆதிதி ராவ் தான். அட்டைப்படத்தை விட இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்பதில் தான் இருக்கிறது மொத்த சுவாரசியுமும். ஒரு சோம்பலான கோடை காலத்தை கழிக்கும் கான்செப்ட்டின் கீழ் தான் போட்டோஷூட் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு சாதாரண அலங்காரத்தில், கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் ஆதிதி ராவ்.

கேமராவின் ஆழத்தை பிரதிபலிக்கின்றன.!

கேமராவின் ஆழத்தை பிரதிபலிக்கின்றன.!

மும்பையில் உள்ள சு காசாவில் படமாக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் ஆனது, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் கேமரா திறன்களின் மீதான தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. இந்த ஒற்றை புகைப்படத்தின் வழியாக, ஒன்ப்ளஸ் 6 ஆனது நிறங்களை எப்படி கைப்பற்றும் என்பதை காண முடிகிறது. காட்சிப்படும் வெள்ளை, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் ஆனது, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் கேமராவின் ஆழத்தை பிரதிபலிக்கின்றன. மேலும் படத்தில் கூர்மையான போகஸ் இருப்பதையும், அதன் விளைவாக ஒரு நாகரீகமான பொக்கே விளைவு உண்டாய் உள்ளத்தையும் காண முடிகிறது.

கனரக கேமராக்களை சுமப்பது ஒரு அன்றாடம்.!

கனரக கேமராக்களை சுமப்பது ஒரு அன்றாடம்.!

தீபிகா படுகோனே மற்றும் கரீனா கபூர் ஆகியோருடன் இணைந்து பல்வேறு வோக் கவர் போட்டோக்களை உருவாக்கி உள்ள எர்ரோகோஸ் ஆண்ட்ரூஹாஸ்க்கு ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு கவர் போட்டோவை உருவாக்கியது இதுவே முதல் முறையாகும். "புகைப்பட நிபுணர்கள், கனரக கேமராக்களை சுமப்பது ஒரு அன்றாடம். ஒரு ஸ்மார்ட்போனை கொண்டு பணியாற்றும் போது, அதன் எடை, ஒரு மிகப்பெரிய நன்மையாக உள்ளது" என்று எர்ரோகோஸ் ஆண்ட்ரூஹாஸ், புகைப்படத்தோடு சேர்த்து தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஒரு தொழில்முறை கேமரா ஷூட்டை போன்றே, ஒன்ப்ளஸ் 6-ஐ பயன்படுத்தி உள்ளார்.!

ஒரு தொழில்முறை கேமரா ஷூட்டை போன்றே, ஒன்ப்ளஸ் 6-ஐ பயன்படுத்தி உள்ளார்.!

இந்த போட்டோ ஷூட்டில், ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள தொழில்முறை நுணுக்கங்களையும் எரிக் முயற்சி செய்தார். அதாவது அவர், ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் மிருதுவான புல்எச்டி+ டிஸ்ப்ளேவை "ப்ரேம்" செட் செய்ய பயன்படுத்தினார். இது ஷாட் எடுக்கப்படுவதற்கு முன்பே அவரை சரியான காட்சியை கண்காணிக்க உதவியது. அட்டைப்படம் என்பதால், ஒன்ப்ளஸ் 6 கேமராவின் 'ப்ரோ' பயன்முறை பயன்படுத்தப்பட்டது. உடன் புகைப்படங்கள் 'ரா' வடிவத்தில் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒன்ப்ளஸ் 6 கேமராவின் வழியாக ஒளி, பிரகாசம், நிறம், போன்ற அனைத்தையும் எரிக் கட்டுப்படுத்தியுளார். அதாவது ஒரு தொழில்முறை கேமரா ஷூட்டை போன்றே, ஒன்ப்ளஸ் 6-ஐ பயன்படுத்தி உள்ளார்.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி வரையிலான ரேம்.!

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி வரையிலான ரேம்.!

சுருக்கமாக, வோக் அட்டை படமானது, ஒன்ப்ளஸ் 6-ன் கேமரா ஆனது புகைப்படத்துறையில் வரையறைகளை அமைக்கும் என்பதை காட்டுகிறது. உடன் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு சிறந்த கேமரா ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி, சிறப்பான வன்பொருள் மற்றும் மென்பொருள்களையும் கொண்டிருக்கும். அதாவது ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி வரையிலான ரேம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். இதன் மொத்த அம்சங்களையும் அறிந்துகொள்ள மே 17, 2018 வரை காத்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Vogue’s May cover shows what the OnePlus 6 camera can achieve. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X