ஜியோவிற்கு மேலுமொரு அடி; நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அறிவித்து வோடாபோன் அதிரடி.!

By Prakash S
    X

    வோடபோன் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி ஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகைகளை அறிவித்துள்ளது வோடபோன். மேலும் இப்போது அறிவித்துள்ள இந்த சலுகைகள் பொறுத்தவரை பல்வேறு வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.

    ஜியோவிற்கு மேலுமொரு அடி; 4.5ஜிபி/நாள் அறிவித்து வோடாபோன் அதிரடி.!

    மேலும் வோடபோனின் புதிய பிரீபெயிட் சலுகைகள் பொறுத்தவரை  தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின்பு புதிய சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    தினமும் 3.5ஜிபி டேட்டா:

    வோடபோனின் ரூ.549 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மொத்தம் 98 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரோமிங்:

    வோடபோனின் ரூ.549 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்பின்பு தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

    தினமும் 4.5 ஜிபி டேட்டா:

    வோடபோனின் ரூ.799 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.5 ஜிபி 3ஜி /4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மொத்தம் 126 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெளியூர் கால் அழைப்புகள்:

    இந்த வோடபோனின் ரூ.799 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்கப்படும் புதிய சலுகையின் பலன்கள் சில வட்டாரங்களில் மாறலாம்.

    ஜியோ:

    ஜியோ வழங்கும் ரூ.549 மற்றும் ரூ.799 திட்டத்தின் முறையே 4ஜிபி டேட்டா மற்றும் 5ஜிபி டேட்டாவும், அதன்பின்பு அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் கால் அழைப்புகள் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டங்கள் 28 நாட்கள் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
     ஜியோஃபை:

    ஜியோஃபை:

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ரூ.1999/- என்கிற புதிய ஜியோஃபை சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பின் கீழ் ரூ.2இ300ஃ- மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களுடன் சேர்த்து ரூ.1,295/- மதிப்புள்ள டேட்டா நன்மையையம் பெறலாம்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    Vodafones New Rs 549 Rs799 Prepaid Plans Launched To Take On Jios Rs 509 Rs799 Packs ; Read more about this in Tamil GizBot

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more