Vodafone Rs 499Plan: தினசரி 1.5ஜிபி டேட்டா: 70நாட்கள் வேலிடிட்டி: வோடபோனின் புதிய திட்டம் அறிமுகம்.!
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் இந்தியாவில் புதிய ரூ.499-திட்டத்தை அறிமுகம்
செய்துள்ளது..

இந்த புதிய ரூ.499-திட்டத்துடன், வோடபோன் நிறுவனம் தனது ரூ.555-ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியையும்அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வோடபோனின் ரூ.499-திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்
இப்போது அறிமுகமாக வோடபோனின் ரூ.449-திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது,பின்புதேசிய ரோமிங் நன்மையையும் வழங்குகிறது. அதன்படி எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பை இந்தபேக் வழங்குகிறது.

ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் நன்மைகள்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் நன்மைகள் ஆனது ZEE5 மெம்பர்ஷிப் உடன் வோடபோன் ப்ளே சந்தாவையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் பெரும்பாலா வட்டங்களில் 70நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருக்க, பீகார் போன்ற சில வட்டங்களில் 60நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. அதன்படி இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும் என டெலிகாம் டாக் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வோடபோனின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டத்தின் திருத்தம் என்ன?
வோடபோன் நிறுவனத்தின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டம் திருத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இப்போது 77நாட்கள் என்ற வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இதற்குமுன்பு வெறும் 70நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது என்பது குறிப்படத்தக்கது.

ரூ.555-ப்ரீபெய்ட் திட்டதின் நன்மைகள்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.555-திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி அளவிலான, டேட்டா,வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100எஸ்எம்,வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தா போன்றவைகளை வழங்குகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் 649திட்டம் நிறுத்தப்பட்டது
அன்மையில் வோடபோன் நிறுவனம் தனது 649 ஐபோன் ஃபாரெவர் போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்தியது. குறிப்பாகஇந்த 649 ஐபோன் ஃபாரெவர் திட்டம் வரம்பற்ற அழைப்பு, 90ஜிபி டேட்டா, 200ஜிபி வரை டேட்டா ரோலிங் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கியது. இதுதவிர ரூ.999மதிப்புள்ள இலவச அமேசான் ப்ரைம் சந்தா, ஒரு வருடத்திற்கான வோடபோன் ப்ளே மெம்பர்ஷிப், மொபைல் ஷீல்ட் மற்றும் ZEE5 பிரீமியம் சந்தா ஆகிய சலுகைகளை வழங்கியது.


Click it and Unblock the Notifications