வோடபோன் அறிமுகப்படுத்தும் ரூ.351 திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா?

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.

|

வோடபோன் நிறுவனம் இந்த பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு தற்சமயம் இந்நிறுவனம் ரூ.351 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு
பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

வோடபோன் அறிமுகப்படுத்தும் ரூ.351 திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி?

வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.351 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 100எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி 56 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித டேட்டத பலன்களும்
வழங்கப்படவில்லை என்பதால், டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வோடபோன் நிறுவனம் இதற்கு முன்பு
அறிமுகம் செய்த சலுகைகளைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந் திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக
இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

 வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

 வோடபோன் ரூ.119 திட்டம்:

வோடபோன் ரூ.119 திட்டம்:

வோடபோன் ரூ.119 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Rs. 351 Prepaid Recharge Pack Offers Unlimited Calling to New Customers for 56 Days : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X