ஜியோவிடம் கூட இல்லாத ஒரு திட்டத்தை அறிவித்து அதிரடி காட்டிய வோடாபோன்.!

வோடபோன் இந்தியா அதன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

|

வோடபோன் இந்தியா அதன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நம்பினால் நம்புங்கள், ஜியோவை விட சற்று கூடுதல் விலைக்கு கிடைக்கும் இந்த திட்டங்கள், ரிலையன்ஸ் ஜியோவின் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மைகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஜியோவின் காம்போ திட்டங்களை குறிவைத்து களமிறக்கப்பட்ட இந்த வோடாபோன் திட்டங்கள் சரியான முறையில் ஜியோவை தாக்கியுள்ளது.

ஜியோவிடம் கூட இல்லாத ஒரு திட்டத்தை அறிவித்து அதிரடி காட்டிய வோடாபோன்.!

இந்த திட்டங்களின் பிரதான சிறப்பம்ச,மானது அதன் டேட்டா நன்மைகள் மட்டும் அல்ல, அவற்றின் செல்லுபடியாகும் காலமும் ஆகும். அப்படி என்ன பெரிய செல்லுபடி காலம்.? அவற்றின் நன்மைகள் என்ன.? இந்த திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோவிற்கும், ஐடியா செல்லுலாருக்கும் எப்படி போட்டியை உண்டாக்குகின்றன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா.!

ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா.!

வோடாபோனின் புதிய ரூ.569/- ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவையும், மறுகையில் உள்ள ரூ.511/- ஆனது, ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டங்களின் ஒரே பின்னடைவு என்னவேனில், இவைகள் தேர்ந்தெடுத்த வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கின்றன, எல்லா இடங்களிலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

84 நாட்கள் என்கிற செல்லுபடி.

84 நாட்கள் என்கிற செல்லுபடி.

எனினும், திட்டங்கள் பயனர்களை தூண்டும் வண்ணம் மிகவும் கவர்ச்சிகரமான 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. இந்த புதிய திட்டங்களைத் தவிர, வோடபோன் அதன் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.549/- மற்றும் ரூ 509/- ஆகியவற்றையும் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டங்கள் முறையே 28 மற்றும் 90 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3.5 ஜிபி டேட்டா மற்றும் 1.4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ்கள்.!

அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ்கள்.!

மற்ற வோடபோன் திட்டங்களைப் போலவே, இந்த ப்ரீபெய்ட் பேக்குகளும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன. முற்றிலும் புதிய வோடபோன் ரூ.569/- ஆனதுஅதன் செல்லுபடியாகும் காலத்திற்குள் மொத்தம் 252 ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி டேட்டாவை வழங்கும். உடன் நாள் மற்றும் வாராந்திர வரம்பில் கீழ் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.

நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்.!

நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்.!

மறுபுறம் உள்ள, ரூ.511/- ஆனது ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி டேட்டா என மொத்தம் 168 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வழக்கமான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் - 84 நாட்கள் ஆகும். குரல் அழைப்புக்கான வரம்பை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

91 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா.!

91 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா.!

நாட்டில் வேறு எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் தற்போது 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை முதன்முதலில் செய்வது வோடபோன் தான். இதற்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டமானது 84 நாட்களுக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மறுகையில் ஜியோவின் ரூ.498/- ஆனது 91 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஒரு சிறந்த திட்டமாகவும் திகழ்கிறது.!

ஒரு சிறந்த திட்டமாகவும் திகழ்கிறது.!

மொத்தத்தில், வோடபோன் இந்தியா 4ஜி / 3ஜி டேட்டா வழங்கும் திட்டங்கள் வரிசையில் சிறந்த மற்றும் மதிப்புமிக்க திட்டங்களை (ரூ.569 மற்றும் ரூ.511) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக வோடபோன் ரூ.569/- திட்டம் சற்று உயர்ந்த விலை கொண்டதாக இருக்கும் மறுகையில், ஒரு சிறந்த திட்டமாகவும் திகழ்கிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Vodafone India Leaves Behind Idea Cellular By Providing 2GB Daily Data at Rs 511 for 84 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X