குஷியில் கஸ்டமர்ஸ்.. ரூ.601 போதும்.. 2 சிம்களுக்கு சலுகை.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 70GB டேட்டா.. 2 ஓடிடி சந்தா!
வெறும் ரூ.601 விலையுள்ள திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3000 எஸ்எம்எஸ்கள், 200 ஜிபி டேட்டா ரோலோவர் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகைகளும், பேமிலி சிம் கனெக்சனும் கொடுக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அதை செய்துவருகிறது.
ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற அனைத்து சலுகைகளையும் வோடபோன் ஐடியாவின் ரூ 601 திட்டம் (Vodafone Idea Rs 601 Plan) வழங்குகிறது. இதில் அமேசான் பிரைம் முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வரையில் ஓடிடி ஆப்சன் இருக்கிறது. அதோடு டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டாவும் கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

வோடபோன் ஐடியா ரூ 601 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 601 Plan Details): இதுவொரு போஸ்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் பிரைமரி சிம் மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு பேமலி சிம் கார்டுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் (National Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை வழங்கப்படும். அதோடு 70 ஜிபி டேட்டா மற்றும் 3000 எஸ்எம்எஸ்கள் சலுகைகள் கொடுக்கப்படும். இந்த டேட்டா போக அன்லிமிடெட் நைட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி முதல் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த டேட்டாவானது, உங்களது திட்டத்தின் டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. அதுமட்டுமல்லாமல், 200 ஜிபிக்கு டேட்டா ரோலோவர் (Data Roll Over) சலுகை கிடைக்கிறது.
அதோடு ஹங்கமா மியூசிக் (Hungama Music), விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV), விஐ கேம்ஸ் (Vi Games) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைபோக 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா, 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா வழங்கப்படுகிறது.
மேலும் 12 மாதங்களுக்கான சோனி லிவ் மொபைல் (SonyLIV Mobile) சந்தா, 1 வருடத்துக்கான சன் நெக்ஸ்ட் பிரீமியம் (SunNXT Premium) சந்தா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் ஏதாவது 2 ஓடிடி தளங்களின் சலுகைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
அதே போல ஈஸிமைடிரிப் (EaseMyTrip) மூலம் ஃபிளைட் டிக்கெட் புக் செய்தால், ரூ.750 ஆஃபர் மற்றும் நோர்டன் (Norton) மூலம் ஒரு வருடத்துக்கான 360 மொபைல் செக்யூரிட்டி கவர் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகைக்கும் மேல், கூடுதலாக ஒரு பேமிலி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள், 3000 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த சிம் கார்டுக்கும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது. அதேபோல பிரைமரி சிம் கார்டில் இருந்து 10 ஜிபி டேட்டாவை கூடுதல் சிம் கார்டுக்கு ஷேர் செய்யும் ஆப்சனும் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், பேலிமி சிம், ஓடிடி போன்ற அனைத்து சலுகைகளும் வேண்டும் என்றால், இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் தாராளமாக தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு அடுத்தப்படியாக ரூ.1001 விலையில் கிடைக்கும் மற்றொரு பேலிமி சிம் கனெக்சன் திட்டம் இருக்கிறது. அதிலும் இதே சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், 140 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








