ஜியோ 5ஜி, ஐடியா 5ஜி மற்றும் வோடபோன் 5ஜி : இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.!

|

முதலில் மிமோ என்றால் என்ன.? அதெப்படி நமது இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கும்.? இதன் வழியாக நாம் எப்படி 5ஜி வேகத்தை பெறலாம் ஏன தெளிவை பெறுவோம்.

ஜியோ 5ஜி, ஐடியா 5ஜி மற்றும் வோடபோன் 5ஜி : இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்!

மல்டிபிள் இன்புட் மல்டிபிள் அவுட்புட் (மிமோ) என்பது ஒரு அடிப்படைசேவை நிலையத்தின் வேகத்தை சுமார் ஐந்து முதல் ஏழு முறை வரை அதிகரிக்கிறது மற்றும் குறுக்கீடுகளும் கணிசமாக குறைக்கிறது, இதனால் சாதனங்களின் டிரான்ஸ்மிஷன் சமிக்ஞை அதிகரிக்கிறது.

50 எம்பிபிஎஸ் வரை.!

50 எம்பிபிஎஸ் வரை.!

குரல் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தும் ஒரு சந்தாதாரர், சராசரியாக 30எம்பிபிஎஸ் மற்றும் 35 எம்பிபிஎஸ் என்ற அளவிலும், உச்ச நேரங்களில் 50 எம்பிபிஎஸ் வரையிலான தரவு வேகத்தை பெறுவர்.

4ஜி வேகத்தை விட அதிகமான வேகம்.!

4ஜி வேகத்தை விட அதிகமான வேகம்.!

ஒப்பீட்டளவில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள 4ஜி திட்டத்தை பொறுத்து, இணைய வேகமானது 4 எம்பிபிஎஸ் முதல் 16எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக கூறினால், 5ஜி தொழில்நுட்பம் உருட்டபப்டுவதற்கு முன்னரே 4ஜி வேகத்தை விட அதிகமான வேகத்தை பெறலாம்.

எந்தெந்த நிறுவனம்.?

எந்தெந்த நிறுவனம்.?

வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தமது எதிர்கால 5ஜி நெட்வர்க் சார்ந்த தொழில்நுட்பங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது அவர்கள் தமது நெட்வொர்க்குகளில் ஒரு பெரிய அளவிலான மிமோ (MIMO) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர்.

எத்தனை காலம் எடுக்கும்.?

எத்தனை காலம் எடுக்கும்.?

இந்த தொழில்நுட்பமானது 5ஜி நெட்வொர்க்குகளுக்கான முக்கிய செயல்பாடாகக் கருதப்படுகிறது மற்றும்இது இந்தியாவில் 2020-க்குப் பிறகு நடைமுறைக்கு உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் செயல்படுத்தப்பட்டு பின்னர் புனே, ஹைதராபாத் மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும்.

ஐடியாவின் ஐடியா என்ன.?

ஐடியாவின் ஐடியா என்ன.?

"தற்போது இந்தியாவில் 4ஜி சேவைக்கான மிமோ தொழில்நுட்பத்தை கொண்டுவரும் பணிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்" என்று ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிமான்ஷு கபபானியா தெரிவித்துளார். ஐடியா செல்லுலார், இப்போது ஒரு பான்-இந்தியா 4ஜி நெட்வொர்க் கொண்டுள்ளது. மற்றும் தற்போது பல்வேறு நகரங்களில் பாரிய அளவிலான மிமோ தொழில்நுட்பத்தை பின் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடபோன் இந்தியாவின் நிலைப்பாடு என்ன.?

வோடபோன் இந்தியாவின் நிலைப்பாடு என்ன.?

"5ஜி சேவையை நம் கைகளுக்கு எட்ட இன்னும் ஒரு சில வருடங்கள் ஆகினும், இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க 4ஜி வழியிலான மிமோ தொழில்நுட்பம் உதவும்,, அதை நாங்கள் கொண்டு வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தின் சோதனைகளை நடத்தி வருகிறோம். இது 5ஜி தொழில்நுட்பத்தின் எதிர்காலம் ஆகும், ஆனால் தற்போது இதை 4ஜி சேவையில் பயன்படுத்துகிறோம்" என்று வோடபோன் இந்தியாவின் தொழில்நுட்ப இயக்குனர் விஷாந்த் வோரா கூறியுள்ளார்.

மிக எளிதாக ஜியோ 5ஜி.!

மிக எளிதாக ஜியோ 5ஜி.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் அனைத்து ஐபி நெட்வொர்க்குகளையும் கொண்டுள்ளது, ஆக அதன் 4ஜி நெட்வொர்க்கை மிக எளிதாக 5ஜி மற்றும் அதற்கு மேலான தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தலாம்.

சோதனை எங்கெங்கு நடக்கிறது.?

சோதனை எங்கெங்கு நடக்கிறது.?

ரிலையன்ஸ் ஜியோவும் தற்போது சீன தயாரிப்பாளரான இசெட்டிஇ உடன் இணைந்து பாரிய மிமோ தொழில்நுட்பத்தின் சோதனைகளை நடத்துகிறது. ஆனால் இந்த சோதனை எங்கெங்கு நடக்கிறது என்பது சார்ந்த வார்த்தைகள் இல்லை.

நெருக்கமான, உயர் போக்குவரத்துப் பகுதிகளிலும்.!

நெருக்கமான, உயர் போக்குவரத்துப் பகுதிகளிலும்.!

இந்த பாரிய மிமோ தொழில்நுட்பத்தை மிகவும் நெருக்கமான அல்லது உயர் போக்குவரத்துப் பகுதிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதல் இதனைக்கொண்டு உட்புற கவரேஜ் மற்றும் உயரமான கட்டிடங்களிலும் இணைய சேவையை மேம்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

எந்த இடைநிறுத்தமும் இல்லாமல்.!

எந்த இடைநிறுத்தமும் இல்லாமல்.!

வல்லுநர்களை பொறுத்தமட்டில், இந்த தொழில்நுட்பம் மிகவும் வரவேற்கத்தக்கது, ஏனெனில் இது அடிப்படையிலேயே தொலைத்தொடர்பு சமிக்ஞையை மேம்படுத்த அனுமதிக்கிறது, அதன் வழியாக நிறுவனத்தின் இணைப்பு திறனை - அதே அளவிலான ஸ்பெக்ட்ரம் கொண்டு - அதிகரிக்கலாம். இறுதியாக பயனர்கள் சிறப்பான தரவு விகிதங்களை, சிறந்த பயனர் அனுபவத்தை, மிக வேகமாக பதிவிறக்கங்களை, ஸ்ட்ரீம் வேகத்தினை எந்த இடைநிறுத்தமும் இல்லாமல் பெறுவார்கள்.

Best Mobiles in India

English summary
Vodafone, Idea & Reliance Jio making networks 5G ready, trial massive MIMO. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X