சத்தமின்றி இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.!
வோடபோன் ஐடியா நிறுவனம் மிகவும் குறைவான விலையில் இரண்டு அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த திட்டங்கள் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது குறைவான விலை என்பதால் அதில் வழங்கப்படும் நன்மைகளும் குறைவாகவே உள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது ரூ.99 மற்றும் ரூ.109 திட்டங்களை தான் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டங்களின்
நன்மைகளைப் பற்றி சற்று விரிவாக இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். இருந்தபோதிலும் இந்த திட்டத்தில் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.

வோடபோன் ஐடியா ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். இருந்தபோதிலும் இந்த திட்டத்தில் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.

அண்மையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.199-ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை அறிவித்தது. குறிப்பாக இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் சலுகையானது பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
அதாவது வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பு தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த திட்டதில் 1.5ஜிபி டேட்டா நன்மையும், 28 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை முதலில் telecomtalk.info வலைத்தளம் வெளியிட்டது.

இது தவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், வீ மூவிஸ் & டிவி பயன்பாட்டின் கூடுதல் நன்மை உள்ளிட்ட
பல்வேறு சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications