வோடபோன் ஐடியா 2025.. யூசர்களுக்கு 365 நாட்கள் ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. தினசரி டேட்டா.. எத்தனை திட்டங்கள்?
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு 2025ஆம் ஆண்டில் கிடைக்க இருக்கும் ஒரு வருட ரீசார்ஜ் திட்டங்களின் (One Year Recharge Plans) முழு விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம். 365 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி உள்ளிட்ட சலுகைகள் இந்த திட்டங்களில் கிடைக்கின்றன. ரூ.1999 முதல் ரூ.3799 வரையில் திட்டங்களின் விலை இருக்கின்றன. இதில் எந்த திட்டம் உங்களுக்கு சரியாக இருக்கும் என்பதை சலுகைகளை பார்த்துவிட்டு நீங்களே முடிவெடுங்கள்.
ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாக வோடபோன் ஐடியா ரூ.1999 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், டேட்டா சலுகை தினசரிக்கு கொடுக்கப்படாது. லம்ப்-சம் முறையில் மட்டுமே கிடைக்கிறது. அதாவது, வருடம் முழுவதுக்கும் 24 ஜிபி டேட்டாவை (24GB Data) மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும்.

அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்காது, வருடம் முழுவதுக்கும் 3600 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் முறையில் கொடுக்கப்படும். ஆனால், வாய்ஸ் கால்கள் மட்டும் வழக்கமான முறையில் கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) வருடம் முழுவதும் செய்யலாம்.
இதற்கு அடுத்து தினசரி டேட்டா சலுகையுடன் வோடபோன் ஐடியா ரூ.3499 திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தலாம். 50 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் டேட்டாவை 90 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இந்த டேட்டா சலுகைகள் போக விஐ டேட்டா சலுகைகள் வருகின்றன.
அதாவது, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா சலுகை, வீக்கெண்ட் டேட்டா சலுகை மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகள் போக வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை பெற்று கொள்ளலாம்.
இந்த ரூ.3499 மதிப்பிலான திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மூன்றாவது வருடாந்திர திட்டமாக ரூ.3599 திட்டம் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே இருக்கின்றன. ஆனால், டேட்டா மட்டும் தினசரிக்கு 1.5 ஜிபிக்கு பதிலாக 2 ஜிபியாக கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா போன்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கும். நான்காவது திட்டமாக வோடபோன் ஐடியா ரூ.3699 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போக ஓடிடி சந்தா (OTT Subscription) பயன்படுத்த கிடைக்கிறது.
ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சந்தா கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த வருடாந்திர திட்டத்துக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இறுதியாக அதிகப்படியான விலைக்கு வோடபோன் ஐடியா ரூ.3799 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) லைட் சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும், தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் வருகின்றன. நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








