மலிவு விலையில் புதிய ஸ்மார்ட்போன்: வோடஃபோன் அறிமுகப்படுத்துகிறது

இது 2.8 இஞ்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் வசதியினைப் பெற்றுள்ளது. இந்த மொபைலில் 256 கே களர் ஸப்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் திரையைக் கொண்டுள்ளது.
858 ஸ்மார்ட் மாடலில் பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஆக்சிலரோமீட்டர், ஆட்டோ ரொட்டேட், ஆட்டோ டர்ன் ஆஃப் போன்ற வசதிகளும் உள்ளது. 2மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1600 X 1200 பிக்ஸல் ரிசல்யூஷனைக் கொண்டுள்ளது. இதில் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.2 ஃப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டுள்ளது.
இதில் உள்ள மற்ற வசதிகள் வாடிக்கையாளர்களின் கண்களை அகலமாக விரியச் செய்யும். 858 ஸ்மார்ட் மொபைலில் 528 எம்எச்இசட் ஏஆர்எம் 11 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு இதில் ஆன்ட்ரோ 200 ஜிப்பியு மற்றும் க்யூவல்காம் எம்எஸ்எம் 7225 ச்சிப்செட்டுகள் பொருத்தப்பட்டுள்ளதன. மிகவும் சிறந்த வகையில் இந்த போன் வைபை மற்றும் புளூடூத் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
இதில் எட்ஜ் டெக்கனாலஜியுடன் கூடிய யூஎஸ்பி வசதியும் உள்ளது. இதில் தகவல்களைப் பதிவு செய்து கொள்ள ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 130 எம்பி வரையில் போர்ட் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மைக்ரோஎஸ்டி கார்ட் 32 ஜிபி ஸ்லாட் வரை மெமரி ஸப்போர்ட் கொடுக்கிறது.
ஸ்மார்ட் போனில் உள்ளது போலவே பல வசதிகள் கொண்ட பட்ஜெட் மொபைல் இது. மியூசிக் கேட்கும் வசதியும் இதில் உள்ளது. வோடாஃபோன் 858 ஸ்மார்ட் மாடல் ரூ.6,695 விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் போன்ற வசதிகள் கொண்ட 858 மொபைலை கடைகளில் எளிதாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications