மூன்று கேமராக்களுடன் விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.
விவோ நிறுவனம் தனது விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதி கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ இசெட்5எஸ் சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை இயக்குதவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

பேட்டரி - விலை:
விவோ இசெட்5எஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, 4ஜி வோல்ட்இ என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
இந்திய மதிப்பில்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்5எஸ் விலை ரூ.15,000-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்5எஸ் விலை ரூ.16,000-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்5எஸ் விலை ரூ.18,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications