Home
Mobile

6.53-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாசமான விவோ Z5i ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் சீனாவில் புதிய விவோ Z5i என்ற ஸ்மார்ட்போன் மாடலைல அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது விவோ Z5 ஸ்மார்ட்போனை போலவே இருக்கிறது. மேலும் சிறந்த மென்பொருள் வசதி,
கேமரா அம்சம், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அருமையான டிஸ்பிளே வசதி

அருமையான டிஸ்பிளே வசதி

விவோ Z5i ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340
பிக்சல் திர்மானம் மற்றும் 90.30 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 480 நிட்ஸ் அளவிலான ப்ரைட்னஸ் போன்றவைகளையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் திரை சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் கேமிங், வீடியோஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி விவோ Z5i ஸ்மார்ட்போனில்ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9பைஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம்என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

விவோ Z5i ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ Z5i ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன்இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ் மற்றும் கலிலியோபோன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Z5i ஸ்மார்ட்போனின் விலைCNY 1,798(இந்திய மதிப்பில் 18,300).ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Z5i Launched in India with Triple Rear Camera Setup : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X