16எம்பி செல்பீ கேமராவுடன் விவோ இசெட்3எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ இசெட்3எக்ஸ் சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
சீனாவில் இன்று 16எம்பி செல்பீ கேமராவுடன் விவோ இசெட்3எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
விவோ இசெட்3எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல்

சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஃபன்டச் ஒஎஸ் 9.0 ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
விவோ இசெட்3எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

கேமரா:
விவோ இசெட்3எக்ஸ் சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் விவோ இசெட்3எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.12,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications