48எம்பி கேமராவுடன் விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது விவோ இசெட்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தின் விற்பனை வரும் செப்டம்பர் 13-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் விவோ.காம் வலைதளங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசத இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளேகைரேகை சென்சொர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தின் விலை ரூ.16,990-ஆக உள்ளது.
128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தின் விலை ரூ.18,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications