4500எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.!
விவோ நிறுவனம் விரைவில் புதிய புதிய விவோ இசெட்1எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:
விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனின் 6.38-இன்ச் முழு எச்டி சூப்பர் யுஆழுடுநுனு டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிப்செட் வசதி:
விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா:
விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தில் 48எம்பி பிரைமரி சென்சார் வசதியை சேர்த்து மூன்று பின்புற கேமராக்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.
சேமிப்பு வசதி:
விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications