Home
Mobile

ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!

விவோ நிறுவனம் தனது விவோ இசெட்1எக்ஸ் (Z1X) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி இந்த 8ஜிபி ரேம் கொண்ட விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.21,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் அறிவித்த விலைகுறைப்பின் மூலம் ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1எக்ஸ் மாடலின் விலை ரூ.14,990-ஆகவும், பின்பு6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1எக்ஸ் மாடலின் விலை ரூ.16,990-ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ ஸ்மார்ட்போன்

குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த விவோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

2340 x 1080 பிக்சல் திர்மானம்

2340 x 1080 பிக்சல் திர்மானம்

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 712 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 712 சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சொர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Vivo Z1X 8GB gets Rs 4000 Discounts in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X