Home
Mobile

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் : விமர்சனம்.!

சிலநாட்களுக்கு முன்பு விவோ நிறுவனம் தனது விவோ இசெட்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்

கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான விலை:

அட்டகாசமான விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ போனின் விலை ரூ.14,990-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ போனின் விலை ரூ.16,990-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ போனின் விலை ரூ.17,990-ஆக உள்ளது.

அருமையான டிஸ்பிளே:

அருமையான டிஸ்பிளே:

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.

எதிர்பார்கப்பட்ட சிப்செட்:

எதிர்பார்கப்பட்ட சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அம்சங்கள்:

கேமரா அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. இசெட்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

விவோ இசெட்1 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Vivo Z1Pro Price Affordable Performance Premium : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X