விவோ Z1 ப்ரோ மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

|

சில மாதங்களுக்கு முன்பு விவோ நிறுலனம் தனது விவோ Z1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக வரவேற்ப்பு பெற்றது என்றே கூறலாம். இந்நிலையில் விவோ Z1 ப்ரோ மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.

 அட்டகாசமான விலைகுறைப்பு

விவோ நிறுவனம் இப்போது அறிவித்துள்ள விலை குறைப்புக்குப் பிறகு...
விவோ Z1 ப்ரோ 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவோ Z1 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவோ Z1 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 15,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மிரர் பிளாக், சோனிக் பிளாக் மற்றும்சோனிக் ப்ளூ போன்ற வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.

சரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ ஓரம்போ..!சரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ ஓரம்போ..!

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அமெரிக்காவின் மர்ம விண்வெளி விமானம் 780 நாட்களுக்கு பிறகு தரையிறங்கியது!அமெரிக்காவின் மர்ம விண்வெளி விமானம் 780 நாட்களுக்கு பிறகு தரையிறங்கியது!

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.
இசெட்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மூன்று
கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ இசெட்1 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Z1 Pro receives permanent price cut by up to Rs 2,000 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X