Home
Mobile

விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.!

தற்சமயம் விவோ நிறுவனத்தின் விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் 1000ரூபாய் விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Z1 ப்ரோ மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும்.

 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Z1 ப்ரோ மாடலை ரூ.13,999-விலையிலும், 6ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Z1 ப்ரோ மாடலை ரூ.15,999-விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்புஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.
இசெட்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மூன்று
கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ இசெட்1 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Z1 Pro receives a price cut again : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X