விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

விவோ நிறுவனம் தனது விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ போனின் விலை ரூ.16,990-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ போனின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. பின்பு இந்த விலைகுறைப்பு சலுகை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான டிஸ்பிளே:

அருமையான டிஸ்பிளே:

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி:

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி:

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!

 கேமரா அம்சங்கள்:

கேமரா அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. இசெட்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

விவோ இசெட்1 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Z1 Pro Gets Price Cut On Flipkart specs and more details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X