Vivo Z1 Pro, Vivo Z1X ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி Price Cut in India!
விவோ நிறுவனத்தின் விவோ இசெட்1 ப்ரோ மற்றும் விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை விவோ ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் போன்ற
தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ இசெட்1 ப்ரோ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ இசெட்1 எக்ஸ்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ இசெட்1 எக்ஸ் மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ இசெட்1எக்ஸ் டிஸ்பிளே
விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ இசெட்1எக்ஸ் கேமரா
விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சொர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

விவோ இசெட்1 ப்ரோ டிஸ்பிளே
விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ இசெட்1 ப்ரோ கேமரா
இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. இசெட்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ இசெட்1 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications