6.26-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ இசெட்1 லைட் அறிமுகம்.!
விவோ இசெட்1 லைட் சாதனத்தில் 3260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.11,459-ஆக உள்ளது.
விவோ நிறுவனம் தற்சமயம் விவோ இசெட்1 லைட் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என விவோ
நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ இசெட்1 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப்
பார்ப்போம்.

டிஸ்பிளே:
விவோ இசெட்1 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.26-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 626 சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.'

கேமரா:
விவோ இசெட்1 லைட் ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

பேட்டரி:
விவோ இசெட்1 லைட் சாதனத்தில் 3260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.11,459-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications