ரூ.85,999/-க்கு ஐபோன் X வாங்குவதற்கு பதில் ரூ.18,923/-க்கு இதை வாங்கலாம்.!

லேசாக கண் அசந்தால் கூட பின்வாங்கி விடுவியம். இந்த நிலைப்பாட்டை உறுதியாக (சீனாவின் சியோமி அளவிற்கு எவரும் இல்லை) பிடித்துக்கொண்ட சில அந்நிய நிறுவனங்களில் ஒன்று தான் - விவோ.

|

போட்டி என்று வந்துவிட்டால் ஒய்வு நேரத்தில் கூட உறக்கம் கூடாது. லேசாக கண் அசந்தால் கூட பின்வாங்கி விடுவியம். இந்த நிலைப்பாட்டை உறுதியாக (சீனாவின் சியோமி அளவிற்கு எவரும் இல்லை) பிடித்துக்கொண்ட சில அந்நிய நிறுவனங்களில் ஒன்று தான் - விவோ.

ரூ.85999/-க்கு ஐபோன் X வாங்குவதற்கு பதில் ரூ.18923-க்கு இதை வாங்கலாம்!

ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரை, விவோ நிறுவனத்திற்கு மொத்தம் இரண்டு தாயகம். ஒன்று சீனா மற்றொன்று இந்தியா. இந்த விடயத்தில் விவோ, சியோமியை மிஞ்சுகிறது என்றே கூறலாம். ஏனெனில் சியோமி கூட சீனாவில் வெளிக்கிடும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வது இல்லை. ஆனால், விவோ அதற்கு நேர் எதிர், பெரும்பாலும் அதன் அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்திய சந்தைக்குள் கொண்டு வந்து விடுகிறது.

நாட்ச் வடிவமைப்பு.!

நாட்ச் வடிவமைப்பு.!

இந்நிலைப்பாட்டில், விவோ நிறுவனம், இன்று சீனாவில் அதன் மற்றொரு "ஐபோன் எக்ஸ்" போட்டியாளர் ஆன விவோ Z1 ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. ஐபோன் எக்ஸ்-ல் இருப்பது போன்றே நாட்ச் வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 660 AIE சிப்செட் கொண்டு இயங்கும் மற்றொரு விவோ ஸ்மார்ட்போனாக திகழ்கிறது.

ஸ்னாப்டிராகன் 660 செயலிகளின் மீதான காதல்.!

ஸ்னாப்டிராகன் 660 செயலிகளின் மீதான காதல்.!

விவோ நிறுவனம், நாகரீகமான நாட்ச் டிஸ்பிளே மற்றும் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 660 செயலிகளுடன் காதல் கொண்டுள்ளது போல் தெரிகிறது. அதன் சமீபத்திய எக்ஸ் தொடரில் இதே கலவையுடன் பல ஸ்மார்ட்போன்கள் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதான அம்சங்கள்.!

பிரதான அம்சங்கள்.!

வெளியான விவோ Z1 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, சமீபத்திய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை கொண்டு இயங்குகிறது. பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது மற்றும் நிச்சயமாக (வழக்கம் போல) மூன்று வெவ்வேறு பளபளப்பான நிறங்களில் - பிளாக், ரெட் மற்றும் ப்ளூ - அறிமுகமாகியுள்ளது.

6.28-இன்ச் டிஸ்ப்ளே.!

6.28-இன்ச் டிஸ்ப்ளே.!

விரிவான அம்சங்களை பொறுத்தவரை விவோ Z1 ஆனது அதன் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது. ஒரு 19: 9 என்கிற அளவிலான 6.28-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் செங்குத்தான நிலையில் பொருத்தப்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது. குறிப்பாக இது சமீபத்தில் அறிமுகமான ஒன்ப்ளஸ் 6 போலவே ஒரு சிறிய தாடை பகுதியையும் கொண்டுள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு.!

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு.!

விவோ Z1 ஆனது முன்னர் வெளியான விவோ X21, விவோ X21 UD, விவோ X20 மற்றும் பல ஸ்மார்ட்போன்களை போன்றே க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 AIE செயலி கொண்டு இயங்குகிறது. மைக்ரோ எஸ்டி அட்டையுடன் 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கத்திற்கான ஆதரவு கொண்ட ஒரு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடலின் கீழ் வாங்க கிடைக்கும்.

12எம்பி செல்பீ கேமரா.!

12எம்பி செல்பீ கேமரா.!

கேமராக்களை பொறுத்தவரை, பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை சென்சாரை கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 12எம்பி கேமரா உள்ளது. இது ஐபோன் எக்ஸ்-ல் உள்ள பேஸ் அன்லாக் அமசத்தினை கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. அளவீட்டில், 7.89 மிமீ தடிமன் மற்றும் 149 கிராம் எடையைக் கொண்டுள்ளது

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.!

ஒரு 3260mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும், இந்த ஸ்மார்ட்போன், 4G LTE, VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை சீனாவில் 1799 யுவானிற்கு (ரூ.18,923) அறிமுகமாகியுள்ளது.

விவோ எக்ஸ்21.!

விவோ எக்ஸ்21.!

இதற்கிடையில், ஸ்னாப்டிராகன் 660 SoC சிப்செட் மற்றும் இன்-பில்ட் ஸ்கேனர் கொண்ட விவோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன விவோ எக்ஸ்21 ஆனது, இந்தியாவில் வருகிற மே 29 இல் அறிமுகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த X21-ன் வெளியீடும், வெற்றியும், விவோ Z1 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Best Mobiles in India

English summary
Vivo Z1 is Yet Another Smartphone With Display Notch and Snapdragon 660 Chipset. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X