பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்த அட்டகாசமான விவோ வொய்95.!
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
விவோ வொய்95 என்ற பெயரில் விற்பனைக்குக் களமிறங்கியுள்ள இந்த புதிய விவோ ஸ்மார்ட் போன் பல சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் பயனர்களை கவர்ந்துள்ளது.

"ஹாலோ ஃபுல் வியூ" டிஸ்ப்ளே
இந்த புதிய விவோ வொய்95 ஸ்மார்ட்போன் "ஹாலோ ஃபுல் வியூ" டிஸ்ப்ளேயுடன் கூடிய ஸ்னாப் டிராகன் 439 12என்.எம். பிராசஸர்ருடன் களமிறங்கியுள்ளது. தலை சிறந்த பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த புதிய விவோ வொய்95 ஸ்மார்ட் போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் மாடலில் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான புகைப்பட சேவை
பட்ஜெட் விலையில் அட்டகாசமான புகைப்பட சேவையை வழங்குவதற்காகவே விவோ நிறுவனம் ஏ.ஐ ஆற்றலுடன் கூடிய ஸ்மார்ட் கேமராகளை இந்த போன்னில் பொருந்தியுள்ளது. விவோ வொய்95 ஸ்மார்ட் போன் இல் 13 எம்.பி. பிரைமரி கேமராவுடன் கூடிய 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி பின்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் மற்றும் ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் போன்ற பல கேமரா சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

விவோ வொய்95 நிறம்
விவோ வொய்95 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் என்ற இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய சந்தையில் விவோ வை95 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெறும் ரூ.16,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வை95 ஸ்மார்ட் போன் விபரக்குறிப்பு:
- 6.22' இன்ச் 1520x720 பிக்சல் கொண்ட 19:9 விகித ஹெச்.டி. பிளஸ் 2.5D கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- அட்ரினோ 505 ஜிபியு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
-எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் சேமிப்பு
- ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- டூயல் சிம் வசதி
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ
- வைஃபை
- ப்ளூடூத்
- 4030 எம்ஏஎச் பேட்டரி
விலை : ரூ. 16,990


Click it and Unblock the Notifications