20எம்பி செல்பீ கேமரா கொண்ட விவோ வ்யை9 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இன்று விவோ வ்யை95 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு துவகத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான்
கூறவேண்டும்.

தற்சமயம் விவோ மற்றும் அமேசான் வலைதளங்களில் விவோ வ்யை9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.16,990-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
விவோ வ்யை95 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றம் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகசமான ஸ்மார்ட்போன் மாடல்

சிப்செட்:
அட்ரினோ 505 ஜிபியு - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதிiயைக் கொண்டுள்ளது, இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன், பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2 - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா இந்த விவோ வ்யை95 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம்.

பேட்டரி:
விவோ வ்யை95 ஸ்மார்ட்போனில் 4030 எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் சிம் வசதி, கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ,வைஃபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications