Home
Mobile

டூயல் கேம்-4030எம்ஏஎச் பேட்டரி வசதிகளுடன் விவோ வ்யை93எஸ் அறிமுகம்.!

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விவோ நிறுவனம் தற்சமயம் விவோ வ்யை93எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸமார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் நோட்ஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு
இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வ்யை93எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக நீலம், சிவப்பு,கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் எம்டி6762

மீடியாடெக் எம்டி6762

குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6762 (ஹீலியோ பி22) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வ்யை93எஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
விவோ நிறுவனம்.

கேமரா:

கேமரா:

விவோ வ்யை93எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதனத்தில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்ப ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்,
மேலும் விவோ வ்யை93எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.17,758-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y93s With MediaTek Helio P22 SoC, 128GB Storage Launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X